அந்திக்கிறிஸ்துவின் முத்திரை THE SEAL OF THE ANTI CHRIST 55-03-11 1.உம் ஜனங்களை மனந்திரும்புதலுக்கும் தரிசனங்களைக் காணவும் அழைக்கிற இச்செய்திக்காக நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இப்பொழுது நாங்கள் வேண்டிக் கொள்ளுவதென்ன வெனில், இன்றிரவு இங்கே கூடியிருக்கும் இந்த ஜனங்கள்.....?....(ஒலி நாடாவில் காலியிடம்) உம்முடைய ஆவி எங்கள்மேல் வந்து, அநுக்கிரகித்து (blessing), பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழைத்து, பழங்கால பாணியிலான சுவிசேஷத்தை ஒவ்வொரு இருதயத் திற்குள்ளும் கொண்டு வருவதாக. நீர் வியாதியஸ்தரை சொஸ்தமாக்கவும், பின்மாற்றமடைந்தோரை தேவனுடைய வீட்டிற்குத் திரும்பவும் அழைக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம். இன்றிரவு ஆராதனைக் கூட்டங்களில் மகிமையை எடுத்துக் கொள்ளும், இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். மாலை வணக்கம், சிநேகிதரே. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க இன்றிரவு மீண்டும் இந்தக் கால்நடை கண்காட்சித்தளத்தில் (livestock exhibit) இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் உங்களைக் கடைசியாகப் பார்த்ததிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் அநேக காரியங்கள் சம்பவித்துவிட்டன. நான் உங்களைப் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது. கர்த்தர் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார், அதற்காகவும், விசேஷமாகத் தங்கள் சரீர சுகமாக்கப்படுதலின் மூலமாகவும், தங்களின் பாவங்கள் மன்னிக்கப்படுதலின் வழியாகவும் அவரைக் கண்டறிகின்ற அநேகருக்காகவும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். மேலும் நம்முடைய மகத்தான வல்லமையுள்ள யேகோவா இன்னும் தம்முடைய ஜனத்தின் மேல் ஆளுகை செய்கிறார், ஆதலால், அது நம்மை எவ்வளவு மகிழ்ச்சி உடையவர்களாக ஆக்குகின்றது. 2. இப்பொழுது, ஏஞ்சலஸ் ஆலயத்தில் (Angelus Temple) நேற்றிரவு எழுப்புதல் கூட்டம் நிறைவடைந்த பிறகு, மாறாக பிறகு, உங்களிடம் திரும்பி வந்திருக்கிறோம், அங்கே அதாவது அதில் என்னுடைய பிரசங்க பகுதி நிறைவடைந்த அசலான பழைய பாணியிலான அந்த ஐந்து இரவு எழுப்புதல் கூட்டங்களில் கர்த்தர் எங்களைச் சந்தித்தார், மேலும் ஒரு அற்புதமான நேரத்தைக் கொண்டிருந்தோம். கூட்டங்களுக்கு வந்து சென்ற பலரைச் சந்திக்க முடிந்தது. சுமார் ஒரு வருஷத்திற்கு முன்பு டாக்டர் மெக்பெர்சனையும் (McPherson) அவருடைய அருமையான மனைவியையும் சந்தித்தேன். சில நிமிஷங்களுக்கு முன்பு, நான் உள்ளே வரும்போது, இங்கே கதவருகே, டாக்டர் கீஃபோர்டின் (Keeford's) மகனைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன். பழைய நண்பர்களுடன் கைகுலுக்கும்போது, என்னே, என்னால் பாடக்கூடுமானால் "வீடு திரும்புகின்ற வாரம்" என்பதைப் பாடியிருப்பேன். அதை எத்தனை பேர் இதற்கு முன் கேட்டிருக்கிறீர்கள்? நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அது ஒரு தெற்கத்தியப் பாட்டு என நினைக்கிறேன்... "முதல் பதினாயிரம் வருஷங்கள், ஒரு மகத்தான வீடு திரும்பும் வாரமாக இருக்கும்." அது ஒரு அற்புதமான பாடல். 3. ஆகையால் இப்பொழுது, நமக்குப் பத்து இரவுகள் இருப்பதால், நாம் அவசரப்பட விரும்பவில்லை, அதைப் பற்றிப் பதட்டமாக இருக்க வேண்டியதில்லை. எல்லா வற்றையும் கர்த்தரிடம் ஒப்புக்கொடுத்து, நிதானமாக நேரத்தை எடுத்துக்கொண்டு, வார்த்தையைப் படித்து, அஸ்திபாரத்தை செம்மையாக அமைத்து, கர்த்தர்மேல் நம்பிக்கையா யிருப்போமானால், அவர் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். அது தான்... எனவே, நீங்கள் இப்பொழுது தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் நண்பர்களை அழைத்து, அவர்களை இவ்வெழுப்புதல் கூட்டங்களுக்கு வரும்படிச் சொல்லுவீர்கள் என்று நம்புகிறோம். இன்று இராத்திரி இங்கேயிருப்பதற்காகவும், சர்வதேச அளவில் 'முழுச் சுவிசேஷ கிறிஸ்தவ வர்த்தகர்கள்' என்று அழைக்கப்படும் இந்த அருமையான குழுவினரால் நிதியுதவி செய்யப்பட்டுள்ளதற்காகவும், நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதில் நானும் ஒரு அங்கத்தினனாக இருக்கிறேன். நான்... உங்களுக்குத் தெரியுமா, நான்... நான் சேர்ந்துள்ள ஒரே -ஒரே அமைப்பு முழுச் சுவிசேஷ கிறிஸ்தவ வர்த்தகர் அமைப்புதான். நான் ஒரு... அல்ல, ஆம், நான் ஒரு வர்த்தகன் தான். நான் கர்த்தரின் வேலை என்னும் தொழிலில் இருக்கிறேன். அது -அது ஒரு மகத்தான அலுவலாகும். அவர்களில் நானும் ஒரு அங்கத்தினனாயிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் அனைத்து சபைகளையும் ஒருமித்து பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். மேலும் நான் லூயிவில் சபைகளின் சங்கம், மற்றும் அது போன்ற சில சிறிய சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன், ஆனால் ஒரு ஸ்தாபனத்தில் அல்ல, ஏனென்றால் நான் அவைகளுக்கிடையே உள்ள பிளவில் நின்று, நாம் சகோதரர்களாயிருக்கிறோம் என்பதைக் கூறவே முயற்சிக்கின்றேன். 4. இப்பொழுது, நாளைக் காலை எங்களுக்கு... கிறிஸ்தவ வர்த்தகர் களுக்கு கிளிஃப்டன்ஸ் (Clifton's) சிற்றுண்டிச் சாலையில் காலை உணவு உண்டாயிருக்குமென நினைக்கிறேன். நான் அங்கு இருக்க... நான் அங்கே செல்ல வேண்டியுள்ளது என்று நினைக்கிறேன். காலை உணவு ஏதாகிலும் கிடைக்கும்படி இந்த முறை சீக்கிரமாகவே வந்துவிடுவேன். ஏனென்றால் கடந்த முறை அது காலியாகிவிட்டதால் நான் பட்டினியாயிருக்க வேண்தாயிற்று, அதனால்... அவர்கள் என்னை அந்தப் படிகளில் தள்ளிவிட்டு எல்லாரும் தங்களுக்கான முட்டைகளைப் புசித்து விட்டனர், நான் சுற்றிலும் தேடிப் பார்த்தபோது சாப்பிட எதுவுமே இல்லாதிருந்தது. நான் ஏதாவது ஒரு கிடந்தேன். ஆகையால் நான் அதிகாலையிலேயே வந்து இடத்திற்குச் சென்று புசிப்பதற்கு முன்பு கிட்டத்தட்ட பட்டினி விடப்போகிறேன். எனவே உங்களை அங்கே சந்திப்போம் என்று நம்புகிறோம். இது ஒலிபரப்பப் படவில்லை. இல்லையா? அன்றொரு இரவு நான் அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்தேன், நான் பேச ஆரம்பித்து அப்படியாக ஆராதனை முழுதுமாக என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு சிறப்பாக, பண்டைய பாணியில் கடிந்து கொண்டிருந்தேன், யாரோ ஒருவர், "நீர் வானொலியில் பேசினதைக் கேட்டேன் என்றார். ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அறியவேயில்லை. எனவே... என்னே, நான் அதற்குப் பிறகு ஒருவகையில் கவனத்துடன் தான் பேசுகிறேன். வானொலியில் ஒலிபரப்பப்படும்போது அது எங்கும்....அத்தகைய அளவிற்கு ஜனங்களைச் சென்றடைகிறது. இந்த ஒலிநாடா பதிவுகளும் எல்லா இடங்களுக்கும் செல்கின்றன... 5. ஆதலால் இன்றிரவு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று நான் நிச்சயித்திருக்கிறேன். நான் உணர்வது போல நீங்களும் உணர்வீர் களாயின், சரீரப்பிரகாரமாகச் சிறிது களைப்படைந்திருக்கிறேன், நிச்சயமாகவே மன ரீதியாகவும் தான், ஆனால் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த எழுப்புதல் லாஸ் ஏஞ்சலஸில் நமக்கு இதுவரை உண்டாயிருந்ததிலேயே மகத்தான எழுப்புதலை அளிக்குமென எதிர்பார்க்கிறோம். இனி எப்போது திரும்பி வருவோமென்று அறியோம். கடந்த வருஷம், இல்லை அதாவது இந்த வருகின்ற அடுத்த வருஷம் பரிசுத்த ஆவியானவர் முதன் முதலில் (அந்தத் தெருவின் பெயர் என்ன?) அசூசா (Azusa Street), இங்கே கலிபோர்னியாவில், லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அசூசா தெருவில் இறங்கி ஐம்பது வருஷங்கள் ஆகின்றது. ஆகையால் நான் அனைத்து ஊழியக்காரர்களும், அனைத்து உள்ள பிரிவினைகளையும் சபைகளும் தங்களிடையே வேறுபாடுகளையும் களைந்து போட்டு, ஒருமித்துக்கூடி பாணியிலான வீடு திரும்புதலைக் வந்து, பழைய கொண்டிருப்பதைக் காண விரும்புகிறேன், நீங்கள் விரும்பவில்லையா? நான் அதை நிச்சயமாகவே ஊழியக்காரர்களிடம் வலியுறுத்த விழைகிறேன். ஓ, யாவரையும் அப்படி ஒருமித்துக் கூடிவரச் செய்வது மிகவும் அருமையாக இருக்கும். 6. உங்களுக்குத் தெரியுமா, யாக்கோபு ஒரு துரவை வெட்டினபோது, பெலிஸ்தர் அவனை அதிலிருந்து துரத்தினார்கள். அவன் அதற்கு "துர்க்குணம்" என்று பேரிட்டான் என்று நம்புகிறேன். மேலும் அவன் இன்னொன்றை வெட்டினான், அவர்கள் பின்னும் அவனைத் துரத்தினர், அதற்கு அவன் "வாக்குவாதம்" என்று பேரிட்டான். ஆகையால் அவன்-அவன் வேறொன்றை வெட்டி, "நம் யாவருக்கும் இடம் உண்டு" என்றான். எனவே நாம் எல்லோரும் வந்து உங்கள் தாகம் தீர்க்கப்படும் வரை பருகுவதற்கு ஒவ்வொருவருக்கும் இடம் உண்டாயிருக்கும் படிக்கு, இந்த வரவிருக்கும் வருஷத்தில் நம்மால் அந்தத் துரவை வெட்ட முடியும் என்று நம்புகிறேன், இல்லையா? நாம் யாவரும் தேவன்மேல் இன்னும் அதிகம் தாகமாக இருக்கிறோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இல்லையா? நாம் தாகமாக இருக்கும் வரை, பெற்றுக்கொள்ள இன்னும் நிறைய உண்டு என்பதை அது காட்டுகிறது. இப்பொழுது, நான் உங்களை இரவு நெடுநேரம் காக்க வைக்காமல் இருக்க முயற்சிப்பேன், அதனால் நீங்கள் நாளை இரவும், மறுநாள் இரவும், தொடர்ந்து அடுத்தடுத்த இரவுகூட்டங்களுக்கு வர இயலும். மேலும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இங்கே ஆராதனைக்கூட்டம் இருக்கும், நாங்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்காக, கூடுமானால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், சுமார் பன்னிரண்டு, ஒரு மணியளவில், பையன் இங்கே வந்து ஜெப அட்டைகளை வழங்குவதற்கு ஏற்பாடுசெய்ய முயல்வோம். நாம் இரண்டு மணிக்குத் தொடங்குவோம் என்று நினைக்கிறேன். அவர்கள் அதைச் சிறிது நேரம் கழித்து அறிவிப்பார்கள். 7. இப்பொழுது, இன்றிரவு ஒரு சிறிய பொருளுக்காக, உங்கள் கவனத்தை யாத்திராகமம் புஸ்தகத்திற்கு திருப்ப விரும்புகிறேன், அதுதான் என்று நம்புகிறேன். அது 21-வது வசனம், மாறாக (மன்னிக்கவும்) அதாவது 21-வது அதிகாரத்தில் 5-வது வசனம். நம்முடைய பொருளுக்கு ஒரு சிறிய பின்னணிக்காக, நாம் பேசுகையில்... நீங்களும் எங்களுடன் சேர்ந்து ஜெபியுங்கள், ஏனென்றால் கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், கட்டுகிறது விருதா, அல்லவா? எனவே நாம் அவரை நம்புகிறோம். ஐந்தாவது வசனத்திலிருந்து வாசிக்கிறேன், அது உரைக்கிறது: அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால், அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக் கொண்டு போய், அவனைக் கதவின் அருகேயாவது கதவு நிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக் கொண்டிருக்கக்கடவன். வாசிக்கப்பட்ட வார்த்தைகளுடன் கர்த்தர் தாமே தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது. இன்றிரவு சிறிது நேரம் "அந்திக்கிறிஸ்துவின் முத்திரை" என்னும் ஒரு பொருளின் பேரில் பேச விரும்புகிறோம். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு "கிறிஸ்துவின் முத்திரை" என்பதன் பேரில் பேச விரும்புகிறேன். 8. இப்பொழுது, இந்நாட்களில் நாம் அதைப் பற்றி நிறைய கேள்விப்படுகிறோம். அது போன்ற பழைய வேதாகம வாக்கியங்களை எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? நான் - நான் அதை விரும்புகிறேன். இப்பொழுது. இதைக் குறித்து போதிக்கும்போது, ஒருவேளை அது நீங்கள் நம்புவதிலிருந்து அல்லது போதிக்கப்பட்டதிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கலாம். மேலும், ஒத்துப் போகாதிருப்பதற்கு நான் கருதவில்லை. நீங்கள் அதை விசுவாசிக்கும் விதத்தில் அது துல்லியமாகப் பொருந்தவில்லை என்றாலும், எப்படியாயினும் நாம் சகோதரர்களாக இருப்போம். புரிகிறதா? நான் எப்போதும் கூறுவதுண்டு. யாராவது செர்ரி பழ அடையைப் (Cherry Pie) புசிக்கும்போது, ஒரு விதை அகப்படுமானால், நீங்கள் அந்த அடையை எறிந்துவிட மாட்டீர்கள், நீங்கள் விதையை மாத்திரம் எறிந்து விட்டு, தொடர்ந்து அடையைப் புசிப்பீர்களே, அதே போல, என் போதனையிலும் அல்லது பிரசங்கத்திலும் அதே காரியத்தைச் செய்யுங்கள். நீங்கள் விசுவாசிக்கின்ற விதத்தில் இல்லாத ஒன்றை எதிர் கொள்ளும்போது, அதை ஒரு பக்கத்தில் எடுத்து வைத்து விடுங்கள். நீங்கள் விசுவாசிக்கும் விதத்தில் உள்ளவற்றை, என்னுடனே கூட, கர்த்தருடனே கூடச் சந்தோஷப்படுங்கள். 9. இப்பொழுது, இது சம்பவிப்பதற்கு மிகச்சரியான தருணம் இதுவே என்று விசுவாசிப்பதாகப் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என நான் உண்மையாகவே நம் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். ஒரு இரவு, விஞ்ஞான ரீதியாகக் கர்த்தருடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பிரசங்கிப்பதற்காக, நான் கடந்த சில மாதங்களாகப் போதுமான அறிவியல் ஆதாரங்களைச் சேகரிக்க முயற்சித்து வருகிறேன். நான் ஒரு கல்வியறிவற்ற நபராக இருப்பதால், விஞ்ஞானப் பூர்வமான விஷயங்களைக் கண்டறியவும், அது அப்படியே சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும், நான் அதை அதிகம் படிக்க வேண்டியுள்ளது. மேலும் நான் அதைச் செய்ய விரும்புகிறேன். நான் அதை லபோக்கில் (Lubbock) முயற்சித்தேன், தோல்வியடைந்தது, லூசியானாவிலும் தோல்வியடைந்தது, ஃபீனிக்ஸில் ஒவ்வொரு இரவும், நான் அதைச் செய்வேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒருவேளை நான் கலிபோர்னியாவில் அதைச் செய்வேன். 10. ஆகவே இப்பொழுது, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாள் உலகம் முழுவதும் கேள்விக் குறியாக உள்ளது. நான் கர்த்தருக்காக வார்த்தையின்- உலகத்தின் (Word - world) பெரும்பாலான பகுதிக்குப் பிரயாணம் செய்துள்ளேன். அமெரிக்காவில் மட்டுமல்ல, அங்கே எல்லாவிடங்களிலும், சமாதானக் குலைச்சல் நிலவுகிறது. முழு உலகமும் அசைக்கப்படுவதாகத் தெரிகிறது; ஏதோவொன்று நேரிடப்போகிறது என்பதைப் போல பயமடைந்திருக்கின்றது. சரி, ஏதோவொன்று நேரிடப்போகிறது என்பதை அது காட்டுகிறது. நாங்கள்... உங்களை பயமுறுத்த விரும்பவில்லை. நான் அதைச் செய்ய இங்கே வரவில்லை; உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல, பயப்படுவதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியை உங்களுக்குக் காட்டவே நான் இங்கே வந்திருக்கிறேன். ஆனால் நாம் நிதர்சனமான உண்மைகளை எதிர் கொண்டாக வேண்டும், நாம் அதைச் செய்தாக வேண்டும். எனவே, உலகெங்கிலும், இந்த அணுசக்தி யுகத்தில், எதுவும் நேரிடத் தயாராக இருக்கும் நிலையில், ஜனங்கள் எல்லோர்மீதும், ஒரு பெரும் பயம் குடிகொண்டுள்ளது என்பதை நாம் கண்டறிகிறோம். அன்றியும் மனுஷர்... 11. சபைகள் குளிர்ந்து உணர்வற்ற நிலையை அடைகின்றன. நாமும் அதை எதிர்கொள்ளக்கூடும். சபைகள் தொடர்ந்து மோசமடைந்து கொண்டேயிருக்கின்றன. உலகில் முன் எப்போதையும் விட அதிகமான பிரசங்கங்கள் செய்யப் படுகின்றன, ஆனால் அதைச் செயல்படுத்திக் காண்பிப்பதோ, உலகம் முழுவதிலும் முன் எப்போதையும் விடக் குறைவாகவே செய்யப்படுகின்றன. அது வெறுமனே தொடர்ந்து தணிந்துகொண்டே செல்வது போலத் தோன்றுகிறது. மகத்தான எழுப்புதல்கள் தேசத்தில் விழுந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துடன் மனுஷர் வந்து; அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடும் பிரசங்கிக்கிறார்கள்; ஆனால் ஜனங்களோ ஒன்றுமே சம்பவிக்காததைப் போன்று, கவலையற்றவர்களாய் உடனடியாகவே கடந்து சென்று விடுகின்றனர். இப்பொழுது, அதற்கு ஒரு காரணம் உண்டாயிருக்க வேண்டும். நீங்கள் இதைப் படிப்பீர்களானால், அதன் காரணம் என்னவென்பதை இது கூறுகிறது. கடைசி நாட்களில் பஞ்சம் தேசத்தைத் தாக்குங் காலம் வரும், ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகியதும் அல்ல, தேவனுடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம். அப்பொழுது ஜனங்கள் தேவனுடைய வசனத்தைத் தேட கீழ்த்திசைதொடங்கி மேற்றிசை, வடதிசை, தென்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள் என்று வேதம் உரைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நாம் வாழுகின்ற இக்காலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தீர்க்கதரிசி அதை உரைத்தபோது, அவன் அமெரிக்க ஐக்கிய நாடுகளை முன்கூட்டியே கண்டானென்று விசுவாசிக்கிறேன். ஏனென்றால் நானறிந்த வரையில் இந்நாளில் அந்த விவரித்தலுடன் பொருந்தக்கூடிய ஒரே இடம் இதுதான். 12. உலகம் முழுவதுமுள்ள மற்ற தேசத்தின் பகுதிகள் கிட்டத்தட்ட பட்டினியால் மரித்துக்கொண்டிருக்கின்றன. நாம் நடைமுறையில் உலகிற்கு உணவளிக்க உதவுகிறோம். இங்கே புசிப்பதற்கும் மற்றும் சகலமும் நம்மிடம் மிகுதியாயிருக்கின்றது. அனைவரும் திருப்தி யாகப் புசிக்கின்றனர், ஏராளமான உடைகள், மேற்கொண்டு பொருளாதார நெருக்கடியும் இல்லை, எல்லாவிடங்களிலும் திரளான பணம் புழங்குகின்றது. ஜனங்களோ தேவனுடைய வசனத்தைக் கேட்கத் தேடியும், அதைக் கண்டடையாமற் போகிறார்கள். ஏனென்றால், ஒவ்வொரு மனுஷனும் தனக்கு ஒரு அத்திமரத்தை உருவாக்கி, தன் சொந்த ஸ்தாபனத்தையும், தன் சொந்த கோட்பாட்டையும், அல்லது தன்னுடைய சொந்த யோசனைகளையும் கொண்டிருப்பதால், செவிகொடுப்பதில்லை. அவன் மாத்திரமே சரி மற்ற ஒருவனும் எவருமே சரியல்ல என்கின்றான்; மேலும் அவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியம் கொள்வதில்லை. ஆதலால் தான் இந்த பரிதாபத்துக்குரிய அமெரிக்க ஜனங்களின் சிந்தை மிகவும் கலக்கமுற்றிருக்கிறது; சரியானது எதுவென்று அவர்கள் அறியவில்லை. ஒருவன் அது இந்த விதமாகத்தான்" என்பான். என்கிறான். மற்றவன், "இது இந்த விதமாகத்தான்" ஒருவரிடம் ஒரு போதனை உள்ளது; ஒருவரிடம் ஒரு கோட்பாடு உள்ளது; ஒருவரிடம் ஒரு பாடல் உள்ளது; ஒருவரிடம் அந்நியபாஷை உள்ளது. உலகில் எனக்குத் தெரிந்த எந்த தேசத்தையும் விட அமெரிக்க ஜனங்கள் தான் மிகவும் குழப்பமுற்றவர்கள். அதைக் கூறுவதற்கு கடினமாக உள்ளது, இப்பொழுது, ஆனால் அதுதான் சத்தியம். நாம் உண்மைகளை எதிர்கொண்டாக வேண்டும். 13. சுகமளிக்கும் ஆராதனைக் கூட்டங்களில் சில வேளைகளில் விபசாரிகள், குடிகாரர்கள் போன்ற ஜனங்கள் மேடைக்கு வருவது போலவே... துர்க்கீர்த்தி கொண்ட அப்பேர்ப்பட்ட அந்த ஸ்திரீயின் ஜீவியத்தை நீங்கள் காண்கையில், நான் அதை அவளுடைய நண்பர்கள் முன்பாகவே பேச வேண்டியதாயுள்ளது, அது கடினமானது தான். ஆனால் உண்மை என்னவோ அது தான் உண்மை. நம்மிடம்... சத்தியமானது கட்டுகிறது அல்லது விடுவிக்கிறது. அது சரிதான். ஆகையால், நாம் சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும், அது தான் சத்தியம். நாம் கொண்டுவரக்கூடும்... அமெரிக்காவில் தேவன் ஏதாவ தொன்றைச் செய்ய முடியும், அப்பொழுது நான்- முதல் காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, அதன் பேரில் அநேக போலியான ஆள்மாறாட்டம் செய்யப்படுகின்றது... நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் தேவனுடைய ஒரு அசைவைத் துவங்கக்கூடும், அது சிலகாலம் கழித்து, ஒரு கூட்ட மூடமத வைராக்கியத்துக் குள்ளாகச் செல்கின்றது. நண்பர்களே, நான் எப்போதாவது அதைக் கூறியிருப்பேனானால், அதுதான் உண்மை. 14. இப்பொழுது, நான் கடந்த முறை இங்கே வந்திருந்தபோது, நான் என்ன செய்யப்போகிறேன் என்று உங்களிடம் கூற முயற்சித்தேன்... அடையாளங்கள், அதிசயங்கள் மற்றும் அற்புதங்கள் போன்றவற் றினூடாக தேவன் வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்; நான் "ஒரு நாள் நான் திரும்பி வந்து உங்களுக்குச் சிறிது காலம் போதிக்க விரும்புகிறேன்" என்று கூறினேன், அதற்காகத்தான் நான் திரும்பி வந்திருக்கிறேன். இப்பொழுது, நாம் ஜீவித்துக்கொண்டிருக்கும் இக்காலத்தை கவனியுங்கள். இப்பொழுது, என் கருத்துப்படி, இது திருப்புமுனையின் காலமாயிருக்கிறது. மனுஷர் ஒன்று தேவனுடைய ராஜ்யத்திற்குள் வருவதற்கு அல்லது தேவனுடைய ராஜ்யத்திற்குப் புறம்பே (sealed out) முத்திரையிடப்படும் நேரமாயுள்ளது. அந்திக்கிறிஸ்துவும் ஒரு நபரை முத்திரையிடுகிறான் என்று விசுவாசிக்கிறேன். "அதின் முத்திரை யையாவது, அதின் நான் அடையாளத்தையாவது, அதின் நாமத்தின் எழுத்தையாவது (அது போன்றவற்றை) தரித்துக் கொள்ளுகிறவ னெவனோ அவன் ஆக்கினைத் தீர்ப்படைந்தாயிற்று" அவன் தேவனுடைய ராஜ்யத்திற்குப் புறம்பே முத்திரையிடப் படுகிறான் என்று வேதாகமத்தில் வெளிப்படுத்தின விசேஷ புஸ்தகத்தில் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். மேலும் கிறிஸ்துவின் ஆவியினால், ஒரு முறை முத்திரையிடப்படும் போதோ, அவன் தேவனுடைய ராஜ்யத்திற்குள் முத்திரையிடப்படுகிறான் (sealed in). மேலும் நீங்கள் ஒன்றிலிருந்து புறம்பாக்கப்பட்டு முத்திரையிடப்படுவது நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாய் மற்றதின் உள்ளாக எவ்வளவு முத்திரையிடப்பட முடியும். இன்றிரவு, நாம் புறம்பே தள்ளி முத்திரையிடுதலைப் பற்றியும், நாளை இரவு, உள்ளாக முத்திரையிடுதலைப் பற்றியும் பேசப்போகிறோம். நான் அதைக் கருத்துக்களின் மீதல்ல. உறுதியாகவே வார்த்தையின் மீது வைத்திருக்க முயற்சிக்கிறேனேயன்றி கருத்துக்களின் மீது அல்ல, பின்பு உங்கள் கருத்தை நீங்கள் அமைத்துக்கொள்ளுங்கள். 15. இப்பொழுது, புஸ்தகத்தில் அதைக் கண்டறிவோம்... அநேக ஜனங்கள் வெவ்வேறு காரியங்களை அடித்தளமிட்டுக் கூறியுள்ளனர்... சமீபத்தில் ஒருவன் என்னிடம் வந்து, "சகோதரன் பிரன்ஹாமே, நான் உம்மிடம் ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன்" என்றான். அவன் "மிருகத்தின் முத்திரை என்றால் என்னவென்று நீர் நினைக்கிறீர்?" என்று கேட்டான். அதற்கு நான், "எனக்குத் தெரியாது" என்றேன். அப்பொழுது அவன், "சரி, நான் உமக்கு ஒன்றைக் காட்டுகிறேன்" என்றான். பரிதாபத்துக்குரிய அந்தப் பையன் நிச்சயமாக ஒரு போலிக்கருத்தால் வஞ்சிக்கப்பட்டிருந்தான். பின்பு அவன் தன் சட்டைப்பையிலிருந்து, சுதந்திர தேவிச் சிலை பொறிக்கப்பட்ட ஒரு பெரிய நீண்ட காகிதத் துண்டை வெளியே எடுத்து, "அந்தச் சுதந்திர தேவிச் சிலைதான் மிருகத்தின் முத்திரை" என்றான். பாருங்கள், நாம் எல்லா வகையான காரியங்களையும் வதந்திகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் அது என்னவென்று தேவனுடைய வார்த்தை உரைப்பது என்ன? அதுவே அடுத்த காரியம். நாம் அறிய விரும்புவது அதுவே: இந்த விசுவாசதுரோகத்தின் முத்திரை என்பது என்ன, அது எங்ஙனம் ஜனங்களின் மேல் போடப்படுகிறது? 16. அண்மையில் இங்கே என் நாட்டில், நான் ஒரு வானொலி ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டிருந்தேன், அதில் ஒருவர் "ஜனங்கள் ஒரு பெரிய பச்சை குத்தும் இயந்திரத்தைப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகாது, மேலும் அவர்கள் மிருகத்தின் சொரூபத்தை மனுஷனின் நெற்றியில் பச்சை குத்தப் போகின்றனர். அல்லாமலும் அந்த மிருகத்தின் முத்திரையை அவனுடைய கையில் இங்கே முத்திரையிடப் போகிறார்கள். அந்த மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர் யாவரும் என்றென்றைக்குமாய் அழிந்துபோவார்கள்" என்றார். இங்கே சமீபத்தில், N.R.A. நிறுவனம் (National Recovery Administration - தேசிய மீட்பு நிர்வாகம்) என் நாட்டில் கொண்டுவரப்பட்டது. இங்கேயும் அது நிறுவப்பட்டுள்ளதென்று நினைக்கிறேன். என் நாட்டில் உள்ள மதவாதிகள் அனைவரும் "மிருகத்தின் முத்திரை அதுவே, என்னே, அது பயங்கரமானது, அதைத் தரித்துக் கொள்ளாதீர்கள். N.R.A-ல் இணைகின்ற எவரும் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்வது நிச்சயம்" என்றனர். பாருங்கள், அது அப்படியல்ல என்பதை நாம் கண்டறிந்தோம். ஆகையால், சில அடிப்படையான உண்மை இருக்க வேண்டும். அப்படியெனில் "கர்த்தர் என்பதிலிருந்து அது வர வேண்டும். அநேகர் அதை இன்னும் உரைக்கிறார்" நீண்டகாலம் சென்றபின் வரப்போகிற நாளுக்குப் பொருத்து கின்றனர். சிலர் அதை இந்நாளுடன் பொருத்துகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை, பரிசுத்த ஆவியானவர் இறங்கின அதே சமயத்தில் அதுவும் தொடங்கினது என்று விசுவாசிக்கிறேன். 17. நீங்கள் கவனிப்பீர்களாயின், இயேசு காட்சியில் வந்த அதே சமயத்தில், கிறிஸ்துவுக்கு விரோதியாயிருந்த, அந்திக் கிறிஸ்துவாகிய யூதாசும் வந்தான். நீங்கள் இந்த ஆவிகளின் சுபாவங்களை இப்பொழுது கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். யூதாஸ், ஒரு பக்திவாய்ந்தவனாயிருந்தான். அவன் ஒரு அஞ்ஞானியாக இருக்க வில்லை. அன்றியும் அவன்தான் அந்திக்கிறிஸ்துவாயிருந்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவன் கிறிஸ்துவுக்கு மிக நெருக்கமாக வேலை செய்து, முக்கியஸ்தனாக (right hand man வலதுகரம் போன்று) செயல்பட்டான். தேவனுடைய ஆதியிலே பரலோகத்தில் பிசாசு முக்கியஸ்தனாக இருந்தானென்றும், விடிவெள்ளியின் மகனாகிய லூசிஃபருக்கு (Lucifer) அதிகாரம் கொடுக்கப் பட்டதையும் அறிவீர்களா? பின்பு அவன் பாவத்தை உலகிற்குள் கொண்டு வந்ததன் காரணம் என்னவெனில், தேவன் சிருஷ்டித்த ஒன்றை அவன் எடுத்து, அதைத் தீங்கான ஒன்றாகத் தாறுமாறாக்க முடிந்தது, அதுதான் ஆதியிலே இந்த சாத்தான் எல்லாத் தொல்லையையும் தொடங்கியது. செய்ததை, அவன் பெருமையினால் வடபுறம் சென்று ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து, மிகாவேலுடனும் அவனுடைய தூதருடனும் யுத்தம் செய்ததையும் உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் கண்டார்... நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? 18. விடிவெள்ளியின் மகனாகிய லூசிஃபர் சர்வ வல்லமையுள்ள தேவனின் முதன்மையான ஆளாக இருந்தான். முதலில், தேவன் தன்னுடன் கிட்டத்தட்ட சக வேலையாளாக இருக்கும்படி அவனுக்கு அருளினார்; அவன் ஒரு சக பணியாளனாக, பகுதியளவு அவருக்குச் சமமாக மட்டுமே சிருஷ்டிக்க இருந்தான்; சாத்தானால் முடியாதிருந்தது. தேவன் மாத்திரமே ஒரே சிருஷ்டிகரா யிருக்கிறார், ஆனால் சாத்தான் தேவன் சிருஷ்டித்த ஒன்றை எடுத்து அதைத் தீமையான வேறொன்றாகத் தாறுமாறாக்கினான். இப்பொழுது காயீனும் ஆபேலைக் குறித்ததான ஒரு அழகான காட்சியைக் கவனியுங்கள்... காயீனும் ஆபேலும், யூதாஸ் மற்றும் இயேசுவை உருவகப்படுத்திக் காட்டினர். இப்பொழுது, கல்வியறிவு படைத்த என் சகோதரரைப் போல நான் கல்லாதவனாகையால், நான் நிழல்களை, மாதிரிகளைக் கொண்டு போதிக்கிறேன். ஏதாவது ஒரு பொருளின் நிழல் என்னவென்று நான் அறிந்தால், அப்பொருளைப் பற்றி எனக்குச் சில புரிதல் உண்டாகும். நிழல் எப்படிக் காட்சியளிக்கிறது என்று நான் காண்கையில், அந்தப் பொருள் எப்படி இருக்கப்போகிறது என்பதை என்னால் மிக நன்றாகச் சொல்ல முடியும். இந்தத் தீமையானவற்றை நிழலின் மூலம் நாம் முன்கூட்டியே காண முடிந்தால், அவற்றைப் பார்க்கும்போது அவை என்னவாக இருக்கும் என்பதை நம்மால் நன்கு கூற இயலும். அல்லாமலும் எனக்குக் கல்வியறிவு இல்லாததால், நான் அதை முன்மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு போதிக்க வேண்டியுள்ளது. எபிரெயர் புஸ்தகத்தில் பவுலும் கூட அதை அதிகம் செய்தான் என்று உங்களுக்குத் தெரியுமா. 19. இப்பொழுது, யூதாசும், காயீன் பலிபீடத்தண்டை ஆபேலைக் கொன்றதைப் போலவே, யூதாசும் பலி பீடத்தண்டை இயேசுவைக் கொன்றான். காயீன் வந்த நேரத்தில் ஆபேல் வந்தான் - ஆபேல் வந்த நேரத்தில் காயீனும் வந்ததுபோன்றே, இயேசு வந்தபோது, யூதாஸ் என்பவனும் வந்தான். இயேசு மரித்த நேரத்தில், யூதாசும் மரித்தான். அல்லாமலும் கிறிஸ்துவின் ஆவி வந்த வேளையில் (இப்பொழுது இதைப் புரிந்துகொள்ளுங்கள்.) கிறிஸ்துவின் ஆவி திரும்பி வந்த அதே வேளையில், அந்திக்கிறிஸ்துவின் ஆவி திரும்பி வந்தது, யூதாசின் ஆவி திரும்பி வந்தது. யூதாஸ் சாத்தானின் மனுஷனாயிருந்தான்; கிறிஸ்து தேவனுடைய மனுஷனாயிருக்கிறார். கிறிஸ்து மாம்சத்தில் வந்த தேவனாயிருந்தார்; யூதாஸ் மாம்சத்தில் வாசம்பண்ணின பிசாசாயிருந்தான். அதாவது... அவர்கள் இங்கே இருந்தபோது எப்படியிருந்தனரோ அதே போன்றே திரும்பி வந்தபோதும் இருந்தனர்... அநேக ஜனங்கள் கல்வாரியை நோக்கிப் பார்க்கையில், மூன்று சிலுவைகளை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அங்கே நான்கு சிலுவைகள் இருந்தன. நீங்கள், "மூன்றை மட்டுமே காண்கிறேன்" எனலாம். பாருங்கள், சிலுவை என்பது ஒரு மரமாகும். "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்." இயேசு ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார், யூதாசும் கிறிஸ்து சிலுவையில் தூக்கப்பட்ட அதே மரத்தைப் போன்ற ஒரு காட்டத்திமரத்தில், அதே போன்று சபிக்கப்பட்டு நான்றுகொண்டு செத்தான். 20. இப்பொழுது, கவனியுங்கள், கிறிஸ்து நடுவிலிருந்தார், அவருடைய இடது பக்கத்தில் ஒரு கள்ளனும், வலது பக்கத்தில் வேறொரு கள்ளனும் இருந்தனர், இப்பொழுது, இவர்கள் விசுவாசியையும், அவிசுவாசியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இப்பொழுது, இந்தப் பக்கத்தில், இடது பக்கத்தில் மெய்யாகவே ஒரு கள்ளனாக இருந்த அந்த மனுஷன், "நீ அப்படியானால்... நீ தேவகுமாரனானால், நீ சொல்லுகிறபடி இந்த மகத்தான ஆளாக இருந்தால், உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்" என்று கூக்குரலிட்டான், "இருப்பாயானால்".... அந்த வார்த்தையைக் கூர்ந்து கவனியுங்கள். இந்தப் பக்கத்திலிருந்த மனுஷனோ, சுவிசேஷ பிரசங்கியாக, விசுவாசியாயிருந்து, சிலுவையிலிருந்து கொண்டு அவனுக்குப் பிரசங்கித்தான், "எதற்காக அவரை நிந்திக்கிறாய்?" 'அவர் தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே, ஆனால் நாமோ நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைந்து, நாம் இருவரும் ஆக்கினைக்குட்பட்டிருக்கிறோம். நாம் இந்த ஆக்கினைக்குப் பாத்திரர்தான், ஆனால் இவர் எதுவும் செய்யவில்லையே" என்றான். அவனுடைய அறிக்கையைக் கவனியுங்கள் "ஆண்டவரே..." என்றான். அவனோ"இருந்தால்..." என்றான், இவனோ "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" என்றான். உடனே இயேசு பிரதியுத்தரமாக "இன்றைக்கு என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்" என்றார். அதுதான் காரியம். அது யாராக இருந்தது? யூதாஸ்காரியோத்து ஒரு காட்டத்திமரத்தில் மரித்தான். இங்கே, தேவன் இறங்கி வந்து, மாம்சத்தில் வெளிப்பட்டு, பரலோகத்திற்குத் திரும்பிச் செல்லுகையில், மனந்திரும்பிய பாவியைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். கிறிஸ்து தேவகுமாரனாயிருந்ததைப் போலவே, கேட்டின் மகனாகிய யூதாஸ், கேட்டிலிருந்து வந்து, மனந்திரும்பாத பாவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு கேட்டிற்குத் திரும்பினான். அது உங்களுக்குப் புரிகிறதா? 21. தேவகுமாரனாகிய கிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்து, விசுவாசியைத் தன்னோடே கூட்டிக் கொண்டு, பரலோகத்திற்குத் திரும்பிச் சென்றார்... கேட்டின் மகனாகிய யூதாஸ், பாதாளத்திலிருந்து பாவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, பாதாளத்துக்குத் வந்து, மனந்திரும்பாத திரும்பிச் சென்றான், உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது, கிறிஸ்து, பூமியில் வந்து, பின்பு அவர் திரும்பிச் சென்றபோது, "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனும், உங்களுக்குள்ளும் இருப்பேன்" என்றுரைத்தார். இப்பொழுது, மணவாட்டிக்கென ஒரு கூட்ட ஜனத்தை வெளியே இழுக்கும்படி பரிசுத்த ஆவியானவர் சபையின் மேல் திரும்பி வந்த அதே சமயத்தில், அந்திக்கிறிஸ்துவும் திரும்பி வந்தான். இப்பொழுது, 1யோவான் 4:3-இல் வாசிக்கிறோம் "பிள்ளைகளே, மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; உலகத்திலே வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியைசெய்கிற அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது" என்றார். 22. நீங்கள் கவனிப்பீர்களானால், எவ்வளவு அழகாக, சாத்தான், சாத்தானின் மகனாகிய யூதாசின் வடிவில் வந்தபோது, அவன் இவ்வுலகில் வந்தபோது, நேரே சபைக்குச் சென்று, முதலாவதாக, சபையில் இணைந்து, சபையில் அங்கத்தினனானான். ஜீவனுள்ள தேவனின் ஆமென். அன்றியும் யூதாஸ் மற்றவர்களுடன் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தான். மத்தேயு 11-ல், பிசாசுகள் அவனுக்குக் கீழ்ப்படிகிறதற்காக, சந்தோஷப்பட்டு, அவர்களோடே கூடத் திரும்பி வந்தான். அதற்கு இயேசு "பிசாசுகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்" என்றார். யூதாஸ் அவர்களுடன் இருந்தான். அவனும் கிறிஸ்துவுடன் வந்து, விசுவாசிகளுடைய ஐக்கியத்தில் உட்கார்ந்தான், ஆனால் அவன் உண்மையில் மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கான வேளை வந்தபோதோ, அவன் தன் சுயரூபத்தைக் காட்டினான். மேலும் அது... 23. நான் யாரையும் புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன், ஆனால் பாருங்கள், இன்று வெதுவெதுப்பான எல்லைக்கோட்டு விசுவாசிகள் பரிசுத்த ஆவியின் அருகே வந்து, "நான் அத்தகைய விஷயங்களை விசுவாசிப்பதில்லை" என்று கூறுவார்கள். அது உங்களுக்குப் புரிகிறதா? அந்த விசுவாசிகள், காயீனைப் போலவே, அம்மட்டும் வருவார்கள், தங்களுடைய தலைவன் யூதாஸ் வந்தமட்டுமே அவர்களால் வர முடியும். போதனையில் மிகவும் அடிப்படையானவர்கள், ஆனால் வேறுபிரிதலின் ஸ்தலத்திற்கு வரும்போது, தேவன் ஒரு கோட்டை வரைகிறார். மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும். ஆனால் மறுபடியும் பிறந்து அந்த அனுபவத்தைப் பெறவேண்டிய கட்டத்துக்கு வருகையில், மனுஷர் "ஓ, அது மூடபக்திவைராக்கியமானது; அதில் எதுவுமே இல்லை" என்று கூறுகிறார்கள். அதன் காரணமாகத்தான் அவர்களால் இயற்கைக்கு மேம்பட்டவற்றை விசுவாசிக்க இயலாது. ஆகையால் தான் அவர்களால் தெய்வீக சுகமளித்தலையும் ஆவியின் கிரியைகளையும் விசுவாசிக்க முடியாது. அவர்கள் மூளையினால் சிந்திப்பதன் மூலம் விசுவாசிக்கின்றனர். அவர்கள் அதை அறிவுப்பூர்வமாக வேதவசனத்தை விசுவாசிக் கின்றனர், ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்து, மானிட இருதயத்தைக் கட்டுக்குள் எடுக்கும் வரை அவர்களால் அதைத் தங்கள் இருதயத்திலிருந்து விசுவாசிக்க முடியாது. என்னே, முற்றிலுமாகவே அது தான் உண்மை. 24. ஒரு மனுஷன் எப்போது அந்த எல்லையைக் கடந்து, தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கிறானோ அப்பொழுது, தேவனுடைய புத்திரனாகிறான், அதன் பின், தேவன் உரைப்பதை அவன் சத்தியமென்று விசுவாசித்து,"சகல வார்த்தைகளும் தேவ ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டவைகளே" என்று கூறுவான். எல்லைக்கோடு வரை, பாதிவழி வரை, அந்த மதபக்தியுள்ள ஆவியைக் கவனியுங்கள். நீங்கள் "சகோதரன் பிரன்ஹாமே, அந்திக்கிறிஸ்துவின் ஆவி ஒரு மதபக்தியுள்ள ஆவியாக இருக்கும் என்று என்னிடம் சொல்லுகிறீரா?" என்று கேட்கலாம். மத்தேயு 24-ல் "கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக, அது அசலான காரியத்தைப் போலவே மிகவும் நெருக்கமாக இருக்கும்" என இயேசு கூறினார். அது சற்றே வித்தியாசமான வெளிப்பாட்டை அளிக்கிறது, அல்லவா? அது ஒரு மதபக்தியுடைய ஆவியாகும், சத்தமிடக்கூடிய ஒரு ஆவியாகவும், ஆவியில் நடனமாடக்கூடிய ஒரு ஆவியாகவும், பிசாசுகளைத் துரத்தக்கூடிய ஒரு ஆவியாகவும், சகலவிதமான அற்புதங்களையும் செய்யக்கூடிய ஒரு ஆவியாகவும் இருந்தும் இன்னும் தேவனுடைய ஆவியினால் பிறவாததாயிருக்கின்றது. இயேசு "அந்நாளில் (இதைக் கவனியுங்கள்) அநேகர் வந்து என்னை நோக்கி: 'கர்த்தாவே! உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா? கிரியைகளைச் உமது நாமத்தினாலே அநேக பலத்த செய்தோம் அல்லவா?' என்பார்கள். அப்பொழுது, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என்று அவர்களுக்குச் சொல்லுவேன்" என்றுரைத்தார். 25. இன்று, நாம் நம்முடைய ஆத்துமாவை, ஒரு - ஒரு நெருப்புத்தழல் போலப் பிரசங்கிக்கக்கூடிய ஒருவர் மேல், அல்லது பிணியாளிகள் மீது கைகளை வைத்து அவர்களைச் சொஸ்தமாக்குகின்ற ஏதாவது ஒருவர் மேல், ஏறக்குறைய . அடிப்படையாக வைத்து விடுகிறோம். அது ஒரு பொருட்டே அல்ல. ஆவியில் நடனமாடுகின்ற அல்லது வெற்றியை முழங்குகின்ற ஒருவர் மீது சார்ந்திருக்கிறோம், அது இன்னும் ஒரு பொருட்டே அல்ல. ஒன்றுமே அல்ல. உணர்ச்சிகளின் மீது சார்ந்திருக்கிறோம், அதெல்லாம் பரவாயில்லை என்றாலும் அதன் பேரில் நீங்கள் சார்ந்திருக்கக் கூடாது. ஆனால் நீங்கள் முதலில் உண்மையான காரியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஜனங்கள் எழுந்துநின்று, முன்னும் பின்னுமாக விழுந்து, பீதியடைந்து, உரத்த சத்தமாய்க் கூச்சலிடுவதையும், நெருப்புக் குழிகளூடாகப் பொசுங்காமல் நடந்து சென்றும், இயேசு கிறிஸ்து என்ற ஒன்றே கிடையாது என மறுதலிப்பதையும் நான் கண்டிருக்கிறேன். எனவே அதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் அவ்விதமாக மூர்க்கமடைந்து "அல்லா, அல்லா, அல்லா, அல்லா" என்று கூச்சலிட்டு, ஒரு ஈட்டியை எடுத்து, அதைத் தங்கள் முகவாய் வழியாகவும் மூக்கினூடாகவும் இவ்வாறாகச் செலுத்தி, வெளியே இழுத்தாலும், ஒரு சொட்டு இரத்தம் கூட வருவதில்லை. நிச்சயமாக. தீர்க்கதரிசிகளின் பண்டிகையில், அவர்கள் தங்களைக் கீறிக்கொள்கின்றனர், அவர்கள் இலைகளை வெட்டும்போது... அங்கே அமர்ந்திருந்த இளம் பெண் இலைகளை வெட்டிக்கொண்டிருக்கையில், அந்த மனிதன் தன் கையை நீட்டி, ஒரு கொடு வாளை எடுத்து, தன் கைகளை இவ்வாறு அடித்தும், இரத்தக்கசிவு கூட ஏற்படுவதில்லை. அப்பேர்ப்பட்ட மூர்க்க வெறியுள்ளவர்கள்....?... நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? 26. நாங்கள் நடனமாடினோம், அல்லது மகிழ்ச்சியாக இருந்தோம், அல்லது கூச்சலிட்டோம் என்பதனால் அல்ல, அதில் எந்த அர்த்தமுமில்லை. "ஆவியின் கனியோ அன்பு. சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, நற்குணம், தயவு, பொறுமை." அதுதான். ஜனங்களால் சத்தமிட்டு, ஆவியில் நடனமாடியும், தங்கள் அண்டை வீட்டாரை வெறுத்து, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மறுக்க முடியும். அது சரிதான். நான் உங்களைக் காயப்படுத்த விரும்பவில்லை, ஆனால் அதைக் கூற வேண்டியிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர், ஆவிகளைப் பகுத்தறிதல் போன்ற வரத்தை அனுப்பி அருளுகின்றார். இப்பொழுது காரியங்களைப் பற்றிய சத்தியத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டது. அவர்கள் ஒரு அற்புதமான குழு, அருமையான இடங்களைக் கொண்டிருக்கின்றனர், ஆனால் நீங்கள் தீங்கின் காரணமாக மிகுந்த பிரிவினையைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் அவ்விதமாக இருக்கக்கூடாது. நாம் ஒருமனம் உடையவர்களாய், ஒரே நோக்கத்துடன், ஜீவனுள்ள தேவனுடைய ஒரே மகத்தான சபையாக இருக்க வேண்டும். தீமைதான் நம் அனைவரையும் பிரித்து வைத்திருக்கிறது. புரிகிறதா? ஆகவே நாம் அதைத் தவறான காரியத்தின் மேல் அடிப்படையாகக் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதலின் மேல், வார்த்தையின் மேல், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் பேரில், நிலையாக அஸ்திபார மிட்டிருக்க வேண்டும். 27. அண்மையில் ஒரு இளைஞன் என் வீட்டிற்கு வந்து, முகமண்டபத்தில் உட்கார்ந்தார். ஒரு பழைய பழுதடைந்த ஷெவர்லே வண்டியில் வந்த அவருக்காக பரிதாப மடைந்தேன். அப்பொழுது அவர், "சகோதரன் பிரன்ஹாம், நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்" என்றார். நான் "சரி, என்ன?" என்றேன். அவர், "நான் மினியாபொலிஸிலிருந்து வருகிறேன்", "என் மனைவி, பெந்தெகொஸ்தே ஜனங்களின் சபைக்குச் சென்று, அவள் ஆவியைப் பெற்றுக்கொண்டாள்" என்றார். இப்பொழுது, அவர் சொன்ன விதமாகவே நான் சொல்கிறேன். "அவள் ஆவியைப் பெற்றுக் கொண்டாள்" என்றார். "நாங்கள் அவ்வப்போது பிரஸ்பிடேரியன் சபைக்குச் சென்றோம்" என்று கூறினார். மேலும் அவர், "அவள் ஆவியைப் பெற்று, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவள் வீட்டிற்கு வந்து, அதைப் பற்றி என்னிடம் எல்லாவற்றையும் சொன்னாள், நானும் சென்று அதைப் பெற வேண்டும் என்று அவள் விரும்பினாள். அதற்கு நான் 'இப்பொழுது, தேனே பார், நீ எங்கு செல்ல விரும்பினாலும் செல், நான் வேலை செய்து பிழைப்பை நடத்துவேன், ஆனால் நான் பக்திமார்க்கமானவன் அல்ல' என்று சொன்னேன் என்றார். மேலும் அவர் "நீ விரும்புகிற எந்த இடத்திற்கும் செல், அது பரவாயில்லை" என்று கூறியிருக்கிறார். அவளோ "ஆயினும், நீரும் வந்து எங்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்றாள். "எங்களுக்கு மிகச் சிறந்த நேரம் உண்டாயிருக்கிறது" என்று கூறினாள். அவர் "அவள் உண்மையில் ஒரு மாற்றமடைந்த ஸ்திரீயாயிருந்தாள்" என்றார். தொடர்ந்து, "சகோதரன் பிரன்ஹாம்", "அவ்வாறு சுமார் இரண்டு வருஷங்கள் சென்றன" என்றார். "அவள்... நாங்கள் சீட்டாடுவதை விட்டுவிட்டோம்; நான் முன்பு போல் களிப்பாட்ட விருந்துகளுக்குச் செல்லவில்லை." "எல்லாம் அவளுடன் நின்றுவிட்டது" என்றார். "நான் வீட்டிற்கு வருவேன்; அவள் சபைக்குச் செல்வாள். நான் உட்கார்ந்து நூலகத்திலிருந்து கொண்டுவந்த புஸ்தகத்தை வாசிப்பேன், அல்லது சங்க விடுதி போன்றவற்றிற்குச் செல்வேன்" என்றார். 28. மேலும், "ஒரு நாள் நான் கார் விற்பனைத்தளத்தில் விற்பனை செய்துவிட்டு வந்தபின்; நான் என் மேலங்கியை அணிந்தேன்" என்றார். "அது கோடை காலமாயிருந்தது." "நான் வெளியே செல்ல என் மேலங்கியை அணிந்தேன். ஏனெனில் சில பெண்மணிகள் அங்கே இருந்தனர்" என்றார். மேலும், "திரும்பி வரும் வழியில்," "நான் என் மேலங்கியைத் சாவிகளைக் தொங்கவிடுகையில், நான் அவர்களிடம் கொடுத்தேனா என சந்தேகித்து, என் சட்டைப் பையில் கையை விடுகையில், ஒரு சிறிய காகிதத்துண்டை எடுத்தேன், அதில், 'நீ நித்தியத்தை எங்கே செலவிடப்போகிறாய்?' என்று எழுதப்பட்டிருந்தது என்றார். "நான் அதைக் கீழே வைத்துவிட்டு, மின்விசிறியை இயக்கினேன்", "நான் அதை மீண்டும் எடுத்தேன், 'நீ நித்தியத்தை எங்கே செலவிடப்போகிறாய்?' என்ற அதைத் தவிர்த்துவிட்டு என்னால் அகன்று செல்லவேமுடியவில்லை" என்றார். அப்பொழுது அவர் "எனக்கு நாற்பது வயதாகிறது; நான்-நான் அந்தக் காரியத்தில் தீர்மானம் செய்தாக வேண்டும்" என்று கூறினார். "அது சரி" "நான் வேலையை வேறொருவரிடம் ஒப்படைக்க வேண்டி யிருந்தது, பின்பு தேவனைத் தேட நான் வீட்டிற்குச் சென்றேன்" என்றார். "நான் ஒரு புகழ்பெற்ற ஊழியக்காரரிடம் சென்றேன்" என்று கூறினார். பாருங்கள், அது திரு.கிரஹாம், பில்லி கிரஹாம் தான். மேலும், "நான் அவருடைய கூட்டத்திற்குச் சென்றேன்" "கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புவோர் அனைவரும் எழுந்து நில்லுங்கள்" என்றார். "நானும் எழுந்து நின்றேன்" என்றார். மேலும் அவர், "கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள், அது தீர்த்துவைக்கும்" என்றார். "நான் அங்குள்ள சிலரிடம் பேசினேன், அதைத்தான் நான் செய்ய வேண்டும் என அவர்களும் என்னிடம் கூறினர்" என்றார். அவர், "என்னால் இயன்றவரை சிறப்பாகச் செய்தேன்" ஆனால், "சகோதரன் பிரன்ஹாமே, அது நிலைவரப் படுத்தவில்லை"என்றார். 29. மேலும் "நான் சில நசரீன் ஜனங்களைச் சந்தித்தேன்" "அவர்கள் என்னை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று, நான் கூச்சலிடும் அளவுக்கு மகிழ்ச்சியடையாவிட்டால், நான் இன்னும் பரிசுத்தப்படுத்தப்படவில்லை என்று என்னிடம் சொன்னார்கள்" என்று கூறினார். மேலும், "நான் அங்கேயே தங்கினேன், ஒரே ஆள் ஜெபிப்பதுபோல் ஒலிக்கும் வரை நாங்கள் யாவரும் ஒன்றாக ஜெபித்தோம்" என்றார். "நான் கூறினார். கூச்சலிட்டேன்" என்று மகிழ்ச்சியடைந்து அப்பொழுது, "அவர்கள் என்னிடம், 'இப்பொழுது, எல்லாம் முடிந்தது' என்றனர். மேலும்,"நான்-நான்-நான்" அப்படித் தான் என்று நினைத்தேன். பிறகு நான் வெளியே சென்றேன், இன்னுமாக அது முற்றுப்பெறவில்லை" என்றார். "நான் என்னுடைய அனைத்து கார்களையும் விற்றுவிட்டேன்" "நான் கிட்டத்தட்ட அரை மில்லியன் டாலர்கள் சொத்துமதிப்புடையவனாக இருந்தேன். என்னுடைய கார்கள் அனைத்தையும், கார் நிறுத்தும் தளத்தையும் விற்றுவிட்டேன்" என்று கூறினார். "எஞ்சியுள்ள ஒரே பொருள் இந்தப் பழைய கார் மட்டுமே, அதைப் பிரசங்கிமார் போன்றோருக்கு அளித்து, என் ஆத்துமாவுக்கு அமைதியைக் காண முயற்சிக்கிறேன்" என்றார். அவர், "நான் கர்த்தரைக் கண்டறிய விரும்புகிறேன்" என்றார். மேலும் அவர் கூறினார், "பின்பு நான் இறுதியாக பெந்தெகொஸ்தே ஜனங்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் சொன்னார்கள் நான்... நான்... எப்போதாவது நான் அந்நியபாஷைகளில் பேசியிருக்கிறேனா என்று என்னிடம் கேட்டனர். நான் அவர்களிடம், "இல்லை" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "பாரும், நீர் அந்நியபாஷைகளில் பேசும் வரை அதைப் பெற்றிருக்கவில்லை" என்றனர். அவர்கள் என்னைத் திரும்ப அழைத்துச் சென்றனர், ஒரு பெரிய கூடாரத்தின் பின்னாலிருந்த சிறிய கூடாரத்தில் கிட்டத்தட்ட நள்ளிரவு வரை ஜெபித்தேன்" என்றார். மேலும் அவர் "அதன்பின் நான் அந்நியபாஷைகளில் பேசினேன்; அப்பொழுது அவர்கள் 'இப்பொழுது நீர் அதைப் பெற்றுக்கொண்டீர்' என்று கூறினார்கள்" என்றார். ஆனால், "சகோதரன் பிரன்ஹாமே, நான் அதைப் பெற்றிருக்கவில்லை" என்றார். மேலும், "பின்னர் நான் ஷ்ரீவ்போர்ட் அல்லது டாலஸிலுள்ள (Dallas) வாய்ஸ் ஆஃப் ஹீலிங்கிற்குச் (Voice Of Healing) சென்றேன்." "அவர்களுடைய பையன்கள் யாவரும் அங்கேயிருந்தனர், அவர்கள் எனக்கு நன்மை செய்ய முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை" என்று கூறினார். மேலும் அவர் "அவர்கள் என்னை நோக்கி, நீர் ஒரு தீர்க்கதரிசி என்றும், உம்மை வந்து காண்பேனானால், நான் இவையெல்லாவற்றையும் செய்தும், அதைப் பெற்றுக் கொள்ளாததினால், நான் அந்த வேறுபிரிக்கும் கோட்டைக் கடந்து விட்டதாகவும், இனிமேல் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாதென்றும் நிச்சயமாகவே நீர் கூறுவீர் என என்னிடம் சொன்னார்கள்" என்றார். 30. நான் அதற்கு "சரி சகோதரனே, நான் உம்மிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்" "நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல. ஜனங்கள் தான் அவ்வாறு சொல்லுகிறார்கள்" என்றேன். ஆனால் நான் சொன்னேன் "நான்-அது, நான் அவருடைய ஊழியக்காரன் மாத்திரமே" என்றேன். ஆனால் இப்பொழுது, உங்களைச் செவ்வையாக்க உங்களுக்கு ஒரு தீர்க்கதரிசி தேவையில்லை; தேவனுடைய வார்த்தை மட்டுமே உங்களுக்குத் தேவை. பின்பு நான் "திரு.கிரஹாம் உம்மிடம் சொன்னது உண்மைதான். நசரீன்கள் உம்மிடம் கூறியதும் உண்மைதான். பெந்தெகொஸ்தேயினர் உம்மிடம் சொன்னதும் உண்மைதான்; அப்படியிருந்தும் அது உண்மையல்ல. கூச்சலிடுவதும், உங்கள் கைகளை உயர்த்துவதும், அந்நியபாஷைகளில் பேசுவதும், கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வது ஆகாது. கிறிஸ்துவைப் பெறுவது என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நபரைப் பெற்றுக்கொள்வதாகும். அதன்பிறகு இந்த மற்றக் காரியங்கள் நிகழ்கின்றன. புரிகிறதா? இப்பொழுது, அக்காரியங்கள் அனைத்தையும் நீங்கள் செய்தும், இன்னமும் கிறிஸ்துவைப் பெறாமல் இருக்கக்கூடும்" என்றேன். அதற்கு அவர், "சரி, சகோதரன் பிரன்ஹாம், நான் அவரை எங்கே கண்டறிவது?" என்று கேட்டார். நான் "உம்மிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உம்முடைய கதைக்குத் திரும்பச் செல்வோம்" என்றேன். அப்பொழுது அவர் எழுந்து "சரி, நீர் என்ன சொல்லுகிறீர்?" என்று கேட்டார். நான் அதற்கு, "நீர் சொன்னீர், அன்று நீர் உள்ளே வந்து, அந்தக் காகிதத்துண்டை எடுத்தபோது, ஏதோவொன்று உம்மைத் தாக்கியது அப்பொழுது நீர் "ஓ, நான் தேவனைத் தேட விரும்புகிறேன்" என்றீரே, "அந்த நேரம்வரை நீர் பாதையில் இந்த ஒரு வழியாகச் சென்று கொண்டிருந்தீர், அதன் பின்பு, நீர் வேறொரு வழிக்குத் திரும்பினீர், அதைச் செய்தது எது?" என்றேன். நான் "உம்முடைய அபிப்பிராயத்தை மாற்றியது எது? ஒரு காலத்தில் தேவனைக் குறித்து அக்கறை இல்லாதிருந்த உமக்குள் ஏதோவொன்று வந்து, அது உம்மை தேவனை நேசிக்கச் செய்யும்படி உம் இருதயத்துக்குள் வந்ததே, அது என்ன? அதைச் செய்தது எது" என்று கேட்டேன். அவர், "எனக்குத் தெரியவில்லை" என்றார். நான் "ஒரு சிருஷ்டி உண்டாயிருப்பதற்கு முன்பு, அதைச் சிருஷ்டிப்பதற்கு ஒரு சிருஷ்டிகர் இருக்க வேண்டும். நீர் அந்தக் காகிதத்தை நோக்கிப் பார்த்த அதே நேரத்தில் தேவன் உம் இருதயத்திற்குள் வந்தார்" என்று சொன்னேன். அவர் அதற்கு "நான் இவ்வளவு காலமும் அதை உடையவனாகவே இருந்தேன் என்றா சொல்லுகிறீர்?" என்று கேட்டார். நான், "நிச்சயமாக, சகோதரனே" என்றேன். அவர் அங்கிருந்து குதித்து, சத்தமிட்டு, அழத் தொடங்கினார். அது தீர்க்கப்பட்டுவிட்டது. அது என்னவாயிருக்கிறது? அவர், "நீர் எனக்காக ஜெபிக்க விரும்புகிறீரா?" என்று கேட்டார். நான் அதற்கு "உமக்காக ஜெபிப்பதனால் பயன் என்ன? உமக்கு ஜெபம் எதுவும் தேவையில்லை. சத்தியம் உம்மை விடுதலையாக்கிற்று" என்றேன். புரிகிறதா? 31.இப்பொழுது, மற்ற விஷயங்கள் பரவாயில்லைதான், ஆனால் நீங்கள் அவை எதையும் குறிப்பிட்டு சுட்டிக் காண்பிக்க முடியாது. அது பரிசுத்த ஆவியாகிய அந்த நபரின் கிரியையாக இருக்கவேண்டுமே அல்லாமல் ஒரு எண்ணம் அல்ல. அவர் ('அவர்' என்பது ஒரு தனிப்பட்ட பிரதிப்பெயர்ச் சொல்லாகும்) - பரிசுத்த ஆவியாகிய அவர் வரும் போது... ஜீவியத்திற்கு ஒரு புதிய வித்தியாசமான மனப்பாங்கையும், கண்ணோட்டத்தையும், எல்லாவற்றையும் கொண்டு வருகின்ற, நம்முடைய இருதயத்திற்குள் ஏற்றுக்கொள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தன்மையின் தோற்றமே பரிசுத்த ஆவியாகும். ஆமென். நீங்கள் சபைகளில் சேர்ந்துகொள்ளலாம், மேய்ப்பர்களுடன் கைகளைக் குலுக்கலாம், புஸ்தகங்களில் உங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம், இவை யாவும் நல்லவையாயினும், அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் ஒருவேளை... பவுல், "நான் மனுஷர் பாஷையையும் தூதர் பாஷையையும் பேசினாலும், ஞானத்தை உடையவனாயிருந்து தேவனுடைய சகல அறிவையும் அறிந்தாலும்; என் சரீரத்தை பலியாகச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், இவை எல்லாவற்றையும் செய்தாலும், நான் இன்னும் ஒன்றுமில்லை" என்றான். அது சரிதான். ஆனால் அவன் "அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்து போம்; ஆனால் அன்பு வரும்போதோ அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்" என்றான். 32. இப்பொழுது, சபைக்கு, மற்றச் சபைகளுடன் சேர்ந்து, பெந்தெகொஸ்தே சபைக்கு இன்றிரவு தேவை என்னவெனில், உங்களை நேராக்கி, இந்தப் பிரிவினைச் சுவர்களை உடைத்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் சகோதர, சகோதரிகளாக ஒன்றிணைந்து, ஒருமித்து வரச்செய்கின்ற பண்டைய பாணியிலான பரிசுத்த ஆவியின் அபிஷேகமும், அன்புமே தேவையாயிருக்கிறது. ஆமென். அன்பு எங்கே இருக்கிறதோ, தேவன் அன்பாகவே இருக்கிறார். "அன்பு நீடிய சாந்தமுள்ளது; அன்பு சினமடையாது; அன்பு இறுமாப்பாயிராது."நீ இறுமாப்படையும்போது அன்பு போய்விடுகிறது. இந்த எல்லா விதமான துர்க்குணமும், வாக்குவாதமும், யுத்தங்களும், பொறாமையும் ஒருவருக்கெதிராக ஒருவர் கொண்டுள்ள தீமையும் எங்கேயிருக்கிறதோ, சகோதரனே, தேவன் அங்கிருந்து வெளியே சென்றுவிடுகிறார். அவ்வளவுதான். இது உண்மையாகும்; நீங்கள் அதைப் பார்க்க முடியும். ஆமென். இப்பொழுது, சகோதரனே, நீங்கள் சரியான பாதையைப் பெற்றுள்ளீர்கள், சரியான வழியைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக அடையாளம் கண்டுகொள்ளும்படி அங்கிகரிக்கத்தக்கதாக, எல்லா ஸ்தாபனங்களிலுமுள்ள புருஷரும், ஸ்திரீகளும் தங்கள் பிரிவினைகளைக் களைந்து, ஒருமித்து, ஒரு பழைய பாணியிலான அசூசா வீதிக் கூட்டத்திற்கு மீண்டும் ஒன்றிணைந்து வர வேண்டும். ஆமென். 33. சரி, நாம் அனைவரும் சகோதரர்களாக இருக்கிறோம், நமக்கு அதனுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாதிருப்பினும், நம்முடைய முதல் தகப்பனாகிய ஆதாம் நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்திற்கு விற்றுப்போட்டான். நீங்கள் இவ்வுலகில் பிறக்கும்போதே, ஒரு பாவியாகப் பிறந்தீர்கள். "நாம் பாவத்தில் பிறந்து, துர்க்குணத்தில் உருவாகி, பொய் சொல்லுகிறவர்களாய் உலகத்திலே வந்திருக்கிறோம்" என்று வேதாகமம் கூறுகிறது. நீ கிறிஸ்து இல்லாமல் பிறக்கும்போது உனக்கு எந்த வாய்ப்புமே இல்லை: உன்னால் எதுவும் செய்ய முடியாது; நம்முடைய தகப்பனாகிய ஆதாமால் மனித இனத்தை விற்கப்பட்டிருந்தாய். ஆதாம் விற்றுப்போட்டான். மேலும் சுபாவப்படியும்.. பரிசுத்த ஆவியையுடைய பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறக்குமானால், அக்குழந்தை இரட்சிக்கப்பட்டு விட்டது என்றும், பாவியான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தை இழக்கப்பட்டுவிட்டது என்னும் போதகம் என் நாட்டிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவிக்கொண்டிருக்கிறதை அறிவேன். ஓ, சகோதரனே, அது அடிமுட்டாள்தனமானது அல்லவா. இன்றிரவு நான் ஒருவிதமாகக் கடுமையாகப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அவ்வப்போது கடுமையாக இருக்க வேண்டியுள்ளது. 34. ஆனால் நான் உங்களைப் புண்படுத்த விரும்பவில்லை; நாம் இதைச் சரிசெய்துகொள்ளவே விரும்புகிறேன். இத்தேசம் முழுதும் பரவிய மகத்தான எழுப்புதல்களில் ஒன்றை நீங்கள் காண்பீர்கள். அது சரியே. நாம் தொடக்க இடத்திற்குத் திரும்பிச்சென்று, சரியாகத் தொடங்குவோம். நீங்கள் தவறான பாதையில் செல்வதைக் காண்பீர்களானால், நீங்கள் செய்யக்கூடிய ஒரே காரியம் என்னவெனில், திரும்பி வருதல் தான், வந்த வழித்தடத்தில் பின்னோக்கித் திரும்பிச் சென்று, நீங்கள் எங்கிருந்து தொடங்கினீர்கள் என்று பாருங்கள். வழக்கமாக ஒரு மனிதன் தேவனுடைய ராஜ்யத்தில் பிறக்கும்போது, அவன் முகம் நேராக கல்வாரியை நோக்கியே இருக்கும். இப்பொழுது, அவன் சற்று உணர்ச்சி வசப்படுகிறவனாக இருந்தால், மூட மதவெறியின் பின் சென்றுவிடுவான். அவன் கொஞ்சம் புத்திகூர்மையான கல்வியறிவு உடையவனாக இருந்தால், மிகவும் ஆசார விறைப்படைந்து, இந்தப் பக்கத்தில் சென்றுவிடுகிறான். அது சரிதான். ஆனால் ஜீவனுள்ள தேவனின் உண்மையான சபையோ, இரண்டு சொஸ்தபுத்தியுள்ள திடமான சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, தரப்பிலிருந்தும் அழைத்து, சரியாக அந்தப் பெரும்பாதையின் நடுவில் செல்லும். ஆமென். இன்று நமக்குத் தேவையாயிருப்பது அதுவே, யாரும் உள்ளே வருவதற்கு வெட்கப்படாத ஒரு சபை. அது பரிசுத்த ஆவியினால் பரிபூரணமாக ஆளுகை செய்யப்படுகின்ற, மூட மத வெறித்தனமற்ற, ஆசார விறைப்பற்ற, தேவனுடைய ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு அருமையான அனலுடைய சபையாயிருக்கும். அதைக் கவனித்துப் பாருங்கள், வலு உறுதியான சுவிசேஷத்தை போதிக்கின்ற போதகர்கள்தான் நமக்குத் தேவை. ஆமென். அதைப் பெற்றுக்கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக. நாம் அதைக் கொண்டிருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். 35. கவனியுங்கள், இப்பொழுது இந்த அடிமையானவன் விற்கப்படும் வேளையைப் போலவே நாம் எல்லோரும் ஆதாமால் பாவத்திற்கு விற்கப்பட்டிருந்தோம். பின்னர், ஒரு நியமிக்கப்பட்ட குறித்த காலத்தில், அடிமையாகவே தொடர்ந்து இருப்பதற்கு அல்லது விடுதலை பெற்றுப்போகும்படிக்குத் தன் தெரிந்துகொள்ளுதலைச் செய்யும் உரிமை இந்த அடிமைக்கு அந்த நேரத்தில் கிடைத்தது. இப்பொழுது, இது நிழலாக முன்னடையாளமாயிருப்பது போலவே நிஜத்தில், யாவரும் ஆதாமால் பாவத்தின் அடிமைத்தனத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர். "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற் றவர்களாக இருந்தோம்; ஆனால் தேவன் ஏற்ற வேளையிலே தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை பாவமாம்சத்தின் சாயலாக அனுப்பினார்..." நம்மை அடிமைத்தனத்திலிருந்து தூக்கியெடுப்பதற்கும், மீட்டுக்கொள்வதற்கும், கிறிஸ்து பூமியின் மேல் இறங்கி வந்தார், கிறிஸ்துவுக்குள் தேவன், "தேவன் கிறிஸ்துவுக்குள் உலகத்தைத் தமக்கு ஒப்புரவாக்கினார்." ஆனால் நாம் இந்நாளில் காண்பதைப் போன்று... இக்காலத்தில் அநேக ஜனங்கள் கிறிஸ்துவை ஒரு தீர்க்கதரிசியாகக் கருத முயற்சிக்கின்றனர். நான் உங்கள் வெளியீடுகளைப் பார்க்கையில், ஒருத்துவக்காரர்களும், இந்த மற்ற பிரிவுகளைச் சார்ந்தவர்களும், அவர் ஒரு நல்ல போதகர் மட்டுமே எனவும், இரத்தம் ஒன்றும் செய்வதாக எண்ணுவதில்லை என்பதையும் காண்கிறேன். சகோதரனே. அவர் தெய்வீகமானவராயிருந்தார். உங்களால் கிறிஸ்துவையும் தேவனையும் சிறிதளவும் பிரிக்க இயலாது. அப்படிக்கூடுமானால், ஆக்ஸிஜனில் (Oxygen - பிராணவாயு) இருந்து ஹைட்ரஜனை (Hydrogen நீர்மவாயு) பிரித்துத் தண்ணீரை உருவாக்க முடியும். அவர்கள் முற்றிலுமாக ஒன்றாயிருக்க வேண்டும். "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருந்தது. உலகத்தின் பாவத்தை நிவிர்த்தி செய்யவும், ஆதாமின் பாவத்தின் தண்டனையை எடுத்துப்போடவும், கிறிஸ்துவும் தேவனும் மாம்சத்தில் இணைந்திருந்தனர். ஆமென், 36. அதை நீ விசுவாசித்து, அதை உன் இருதயத்தின் ஆழத்திற்குள் கொண்டுசெல்லுவாயானால், அங்கே ஏதோவொன்று கிரியைசெய்யப் போகிறதைக் கண்டுகொள்வாய். இயேசு ஒரு மனிதர் மட்டுமே என்று நீ நினைக்கையில், அவர் ஒரு மனிதனை விடவும் மேலானவராக இருந்தார். அவர்தான் அந்தத் தெய்வீகமானவராக இருந்தார். "தேவன் அவருக்குள்ளிருந்து. உலகத்தைத் தமக்கு ஒப்புரவாக்கினார்." ஏனெனில், அவர் தாழ இறங்கி வந்து, நமக்கு பந்துஜனமானார். அவர் இனத்தானாக இருக்க வேண்டியிருந்தது. இன்னும் ஒரு சில இரவுகளில், நான் இனத்தான் மீட்பர் என்பதன் பேரில் பிரசங்கிக்கையில், முறையானவராக இருந்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவர் உறவின் உலகத்தின் பாவங்களை நிவிர்த்திசெய்யும் பொருட்டு தேவன் தாமே மனித இனத்திற்கு இனத்தாளாக ஆக்கப்பட்டார். பாவமானது அவர்மீது நங்கூரமிட்டது. நாம் பால் இச்சையால் பிறந்தவர்களாதலால், நம் ஒருவராலும் அதைச் செய்ய முடியவில்லை. நம்மில் ஒவ்வொருவரும், நாம் எப்பேர்ப்பட்ட பெற்றோரைக் கொண்டிருந்தாலும் சரி, நாம் அனைவரும் பாலியல் இச்சையினால் பிறந்தவர்கள். ஒரே ஒருவர் மாத்திரமே பரிசுத்த நபராகப் பிறந்தார், அவர் பரிசுத்த ஆவியால் உற்பத்தியாகி, ஒரு கன்னிகையின் கர்ப்பத்தில் உண்டான கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே ஆவார். நம்மைத் திரும்பவும் தேவனிடத்திற்கு மீட்டெடுக்க அவர் தம் ஜீவனையே ஈந்தார். ஆமென். ஓ, நான் பக்திப்பரவசமாக, மிக நன்றாக உணர்கிறேன். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் நீங்கள் மெய்யான சத்திய மூல உபதேசங்களை கண்டுகொள்ளும்போது, நம்முடைய அஸ்திபாரம் நிலை உறுதியுடன் இருப்பதை நீங்கள் கண்டுகொள்ளும்போது, பாதாளத்திலிருக்கும் சகல பிசாசுகளாலும் தேவனுடைய அஸ்திபாரத்தை நிலைகுலைக்க முடியாது."இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." நிச்சயமாகவே பாதாளத்தின் வாசல்கள் அதற்கு விரோதமாயிருக்கும், அவை ஒருபோதும் மேற்கொள்வதில்லை. ஆனால் தேவனுடைய அஸ்திபாரம் உறுதியாக நிலைத்து நிற்கிறது. ஆமென். 37. கவனிக்கவும், அப்பொழுது, இந்த மனுஷன் ஒரு அடிமையாகயிருந்து, (ஒலி நாடாவில் உள்ள இந்த வாக்கியம் ஆங்கில புஸ்தகத்தில் சரியாக இல்லை). ஒரு ஆளோட்டியின் கீழ் வேலைசெய்து கொண்டிருந்தான், யூபிலியின் கடைசி வருஷம் வருகையில், ஆசாரியன் என்ன செய்து எக்காளங்களை ஊதும்போது, தான் கொண்டிருப்பினும் அது பொருட்டல்ல, அவன் வயலில் மண் வெட்டிக் கொண்டிருந்தாலும், யூபிலியின் சத்தம் வருமானால், அப்பொழுதே அவன் அந்த மண்வெட்டியை கீழேபோட்டுவிட்டு, அந்த ஆளோட்டியிடம் "இனிமேல் உனக்கு என்மேல் அதிகாரம் கிடையாது; நான் விடுதலையாகி விட்டேன், என் மனைவி, பிள்ளைகளிடம் வீட்டிற்குச் செல்கிறேன்" என்று கூற முடியும். அவனால் அதை எப்படி செய்ய முடிந்தது? ஏனென்றால் அவன் அதைக் கேட்டதனால்தான். "விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்." அந்த யூபிலியின் சத்தம் வந்த உடனேயே தான் ஒரு சுயாதீனன் என்பதை அவன் நிச்சயமாக அறிந்திருந்தான். அவ்விதமாகச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு, அதை விசுவாசத்தினால் கேட்பதன் மூலம், ஒவ்வொரு அடிமையையும் பாவத்திலிருந்து விடுவிக்கும்படியாக, மனித இனத்திற்கு ஒரு யூபிலியைக் கொண்டுவர கிறிஸ்து இயேசு பூமிக்கு வந்தார். ஆமென். 38. இப்பொழுது. நீங்கள் பெற்றிருக்கிறேன்" என்று சொல்லியும், நீங்கள் இன்னமும் "நான் விடுதலை கோபப்படுகிறீர்களா, நீங்கள் இன்னமும் உங்கள் அண்டை வீட்டாரை வெறுக்கிறீர்களா, நீங்கள் ஒருவருக் கொருவர் பேசிக்கொள்வதில்லையா, அப்படியிருக்க நீங்கள் விடுதலை அடைந்திருக்கிறீர்களா? "சகோதரனே, உங்களுக்கு இன்னொருபடி தேவையாயிருக்கிறது" என்று கூற தூண்டப் படுகிறேன். அது சரிதான். 39. ஓ, நீங்கள் "நான் ஒரு பெந்தெகொஸ்தே சபையைச் சார்ந்தவன்" என்று கூறலாம், அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாயிருப்பதைத் தவிர வேறொரு காரியமும் இல்லை. மேலும் நீங்கள் பிறக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவி உங்களுக்குள் பிரவேசிக்கிறது, அப்பொழுது நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்தை ஜீவிப்பீர்கள். தேவன் பழைய ஏற்பாட்டில் ஒரு உடன்படிக்கை செய்தார்; அவர் புதிய ஏற்பாட்டிலும் கிறிஸ்துவைக் கொண்டு ஒரு உடன்படிக்கை செய்தார். அந்நாட்களில் ஒரு உடன்படிக்கை செய்யும் ஒவ்வொருவனும், அவர்கள் ஒரு மிருகத்தை எடுத்து, அதைக் கொன்று, அதின் உடலைத் துண்டித்து, உடன்படிக்கையை காகிதத்தில் எழுதி, அதைத் துண்டுகளாகக் கிழிப்பார்கள், அவர்கள் மீண்டும் கூடிவருகையில், அவ்விரண்டு காகிதத் துண்டுகளும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகப் பொருந்த வேண்டியிருந்தது. 40. உயிர்த்தெழுதலில் நாம் உயிர்த்தெழுவோமானால், தேவன் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தைப் பிளந்து எடுத்த அதே ஜீவன், அந்தச் சரீரத்தை மேலே உயர்த்தி, உன்னதமானவரின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, பின்பு பரிசுத்த ஆவியைத் திரும்ப அனுப்பின அதே ஜீவனானது உங்களை தேவனை மையமாகக் கொண்ட ஒரு ஜீவியத்தை ஜீவிக்க வைக்கும், உங்களுக்குள் இருப்பது அப்படியல்லவென்றால் கிறிஸ்துவின் ஆவி அல்ல. நீங்கள் "பாரும், சகோதரன் பிரன்ஹாமே, நான்- நான்- நான் சத்தமிட்டிருக்கிறேன்; நான்- நான் நடனமாடி இருக்கிறேன்; நான் அந்நியபாஷைகளில் பேசியுள்ளேன்" என்று கூறலாம். ஓ. ஆம், சகோதரனே, மந்திரவாதிகள் அந்நிய பாஷைகளில் பேசி, மனித மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடிப்பதை நான் கண்டிருக்கிறேன். அது சரியே. அவர்கள் ஒரு குச்சியை அப்படியாக நிறுத்தி வைக்கும்போது, அது அந்நிய பாஷைகளில் எழுதுகிறதையும், ஜனங்கள் அங்கே நின்று அதை வாசித்து, வியாக்கியானம் செய்வதையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் பரிசுத்த ஆவி இருந்ததாக நீங்கள் கூற மாட்டீர்களல்லவா. இப்பொழுது, பரிசுத்த ஆவியைக்கொண்டு அந்நியபாஷைகளில் பேசுதல் கிடையாது என்று நான் சொல்லவில்லை. நான் அப்படிச் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் அந்நியபாஷைகளில் பேசியும், இன்னுமாகப் பரிசுத்த ஆவியைப் பெற்றிராமல் இருக்க முடியும் என்றே சொல்கிறேன். அது சரிதான். 41. ஒரு பெந்தெகொஸ்தே சபையில் அது கடினமானது என்று நான் அறிவேன். பெந்தெகொஸ்தே ஜனங்களுக்கு அது கடினமானது. ஆனால் சகோதரனே, நான் உங்களை நேசிக்கிறேன் என்றால், உங்களிடம் சத்தியத்தையே கூறுவேன். நான் உங்களுக்குச் சத்தியத்தைக் கூறாவிட்டால், நியாயத்தீர்ப்பு நாளில் தேவன் என்னைக் கணக்கொப்புவிக்கச் செய்வார். அது சரியே. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, உங்கள் ஜீவியத்தில் ஜீவிக்கின்ற பரிசுத்த ஆவியின் கனிகள் ஆகியவற்றுடன் தேவனுடைய அன்பு உங்கள் இருதயத்தில் வாசமாயிருந்தால் அன்றி, நீங்கள் என்ன செய்து காண்பித்தாலும், அதனால்நன்மையில்லை. கிறிஸ்துவின் திருச்சபை ஏன் பிளவுபட்டது என்று நினைக்கிறீர்கள்? இவர்கள் இவர்களைப் பருந்துக்கூடு என்றும், அவர்கள் அவர்களை வேறு பெயர்களாலும் அழைத்துக் கொண்டிருக்கின்ற கோட்பாட்டைக் கிறிஸ்து விரும்புகிறாரென நீங்கள் எண்ணுகிறீர்களா? கிறிஸ்துவின் ஆவி அதைச் செய்கிறது என்று நினைக்கிறீர்களா? ஒருபோதும் இல்லை. நாம் சகோதரர்க ளாயிருக்கிறோம். உங்கள் கனிகளினாலே நீங்கள் அறியப் படுகிறீர்கள். ஆமென். ஓ, என்னே, அது என் இருதயத்தில் எப்படியாக என்னைக் காயப்படுத்துகிறது, ஆனால் சகோதரனே அதுதான் உண்மை. எப்படியாயினும் என் பாரம் இறங்கி விட்டது. இப்பொழுது, நான் அதைக் கூறிவிட்டதால், அதற்காகப் பதிலளிக்க - பதிலளிக்க வேண்டியதில்லை. சரி. அது இயங்கும் விதத்தைக் கவனித்துப் பார்ப்பீர்களானால், அதில் கிறிஸ்து இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை நீங்கள் கண்டுகொள்ள இயலும். புரிகிறதா? அது சாத்தான் உள்ளே நுழைந்து, ஜனங்களின் கண்களைக் கட்டுவதாயிருக்கிறது. 42. கவனியுங்கள், யூபிலி சத்தம் தொனிக்கும்போது, அந்த மனிதன் விரும்பினால், தன் மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு, வீட்டிற்குச் சென்றுவிட முடியும். ஆனால், அவன் அதைச் செய்ய விரும்பவில்லை என்றால் என்ன சம்பவிக்கும்? இப்பொழுது, என்ன சம்பவித்தது? அப்பொழுது அவர்கள் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டு போக வேண்டும். நியாயாதிபதிகள் அவனைக் கதவுநிலையின் அருகே சேரப்பண்ணி, அவன் காதை இழுத்து, கதவுநிலையின் மேல் வைத்து, காதைக் கம்பியினாலே குத்தினர். அந்நேரம் முதற்கொண்டு, இனி ஒருபோதும், அவனால் அந்த யூபிலியைக் கேட்கவே முடியாது என்பதற்கான ஒரு அடையாளமாக அது இருந்தது. அது முடிந்துபோய் விட்டது. அவன் அதை நிராகரித்ததினால், அவன் முத்திரையிடப்பட்டதினால், அவன் வாழ்க்கையில் எத்தனை யூபிலிகளை கடந்தாலும், அவனால் ஒருபோதும் மீண்டும் அதைச் செய்ய முடியாது. ஓ! சகோதரனே, அது ஜீரணித்துக்கொள்ள சுலபமானதல்ல. அவன் சத்தியத்தை புறக்கணித்தான், சத்தியத்தை நிராகரித்ததினால், அவன் மீண்டும் ஐக்கியத்திற்குள் வரக்கூடாதபடி, யூபிலியின் ராஜ்யத்தி லிருந்து என்றைக்குமாய் புறந்தள்ளப்பட குறிக்கப்பட்டான். நீங்கள் "அப்படி நமக்குச் சம்பவிக்குமா, சகோதரன் பிரன்ஹாம் என்று கேட்கலாம். நிச்சயமாகவே. 43. கவனியுங்கள், நிச்சயமாகவே. இயேசு அவ்வாறு கூறினார். ஒரு நாள் அவர் அங்கே நின்று பொல்லாத ஆவிகளைத் துரத்திக் கொண்டிருந்த போது, ஜனங்கள் வந்து, "ஏன், அவன் ஒரு பிசாசு. அவன் பெயல்செபூல்" என்றனர். இயேசு அவர்களை நோக்கித் திரும்பி: "அவரே சத்தியமாயிருந்தும், சத்தியத்தை வெளிப்படுத்திக் காண்பித்தும், தேவன் தாம் அவருடன் இருந்ததை உறுதிப்படுத்தியும் கூட, அவர்கள் அவரை விசுவாசிக்காத படியால். அவர், "நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்" என்றார். அவர் பொல்லாத ஆவிகளைத் துரத்தி, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து கொண்டிருக்கையில், கூடியிருந்தவர்களை நோக்கி, ஜனங்களைப் பார்த்தார். வேறொன்றை அறிந்தவர்களாக, போதகர்கள் வந்தனர்... அவர்கள் வேறொன்றை அறிந்திருந்தனர்; தங்கள் இருதயங்களில் அவர்கள் வித்தியாசமாக அறிந்திருந்தனர். "தேவன் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்." பரிசுத்த ஆவியானவர் அசைவாடினார், ஆனால் பட்சபாதம், சபைக்கோட்பாடு ஜீவாதிபதியைப் புறக்கணிக்க வேண்டியிருந்தது. அதே ஆவி காரணமாக, அவர்கள் இன்றும் உலகத்திலே உள்ளது. இது பயபக்தியூட்டுகிறது என்று நான் அறிவேன். பயபக்தியூட்டுவதைத் தான்அது அப்படியாக நான் விரும்புகிறேன். இங்கேயிருக்கிற ஒவ்வொரு நபரும் அதைக் கண்டுகொள்ளுமாறு, அது மிகவும் ஆழமாகச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, எவனாகிலும் அதற்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மள்ளிக்கப்படுவதில்லை." 4. இப்பொழுது, பவுல் அதை எபிரெயர் 10-வது அதிகாரத்தில் எடுத்து விவரிக்கிறான். அவன் "நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர் களாயிருந்தால்..." என்றான். பாவம் என்பது அவிசுவாசமாகும். அப்படியானால் சத்தியமானது நமக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கப் பட்ட பின்பு நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலே இருக்கும். " மேலும் சுவிசேஷ சத்தியம் ஜனங்களுக்கு முன் வழங்கப்பட்டிருந்தும், அவர்கள் தங்கள் தலையைத் திருப்பி அதைப் புறக்கணித்தால், அதன் பின்பு சாத்தான் அவர்களைக் கதவுநிலையின் அருகே கொண்டு செல்கிறான். அவர்கள் தங்கள் மதக்கோட்பாடுகள் போன்றவற்றைச் சேவிக்க வாஞ்சித்து, தங்கள் செவியை நீட்டி, அதில் குத்தப் பட்டுள்ளதால், இனிமேல் உங்களால் ஒருபோதும் சத்தியத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது. அதுதான் அந்த முன்னடையாளமான நிழலும், பின்வந்த நிஜமுமாயிருக்கிறது. பவுல் அதே காரியத்தைத்தான் கூறினான், "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய் - மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்." அதுதான் காரியம்: தேவனுடைய பரிசுத்த ஆவியைப் புறக்கணிப்பது, நீங்கள் அதைப் பெற்ற பிறகு, அதை விசுவாசித்து அறிந்த பின்பும், நீங்கள் பட்சபாதத்துடன் பின்வாங்குகிறீர்கள்... 45. பாவியானவன் ஜனக்கூட்டத்துக்குள் வந்து, சுற்றிலும் பார்த்துவிட்டு, "ஆ, நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அதில் எதுவும் இல்லை" என்று கூறி, தன்னால் முடிந்தவரை விறைப்பாக வெளியே செல்கிறான். சகோதரனே, இவ்வேளைகளில் ஒரு முறை நீ கடைசியாக வெளியே செல்வாய். மேலும் சிலர் கூட்டத்திற்கு வந்து, பரிசுத்த ஆவியானவர் அசைவாடுவதைக் காணும்போது "அது பிசாசின் கிரியை" என்று கூறுவார்கள். நீங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதை தெளிவாக உணருகிறீர்களா? "பாருங்கள், நான் சபையைச் சேர்ந்தவன். நான் - என் பெயர் புஸ்தகத்தில் உள்ளது, என் தாய், தகப்பன் இதைச் சேர்ந்தவர்கள், அதைச் சேர்ந்தவர்கள்..." என்று நீ கூறலாம். அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இரட்சிப்பு என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயமாயிருக்கிறது. நீங்கள் பரிசுத்த ஆவியானவர் ஏதாவதொன்றை வெளிப் படுத்துவதைக் கண்ட பின்பும், அடையாளங்களையும் அற்புதங் களையும் கண்டும், நீங்கள் நீங்கள் தேவ அன்பு வழிந்தோடுவதைக் கண்டும், நீங்கள் பரிசுத்த ஆவியின் கிரியைகளைக் கண்டும், துணிகரமாய் திரும்பி, "நான் அதை விசுவாசிக்கவில்லை" என்று சொல்லுகிறீர்கள். உங்கள் இருதயத்தின் ஆழத்தில் நீங்கள் அதை விசுவாசிக்க விரும்பினாலும்...ஆனால் உன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், சில சமயக்கொள்கைகள் உன்னை இங்கே பிடித்து வைத்திருப்பதால், நீ அந்தக் கோட்டைக் கடந்து, வாசல் நிலைக்காலண்டைக் கொண்டு செல்லப்படுகிறாய். வேதாகமம் உரைப்பதையே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 46. அவன் போக விரும்பவில்லை என்றால்... அவனால் விடுதலை பெற்றுச் செல்ல முடியும்; அதற்கு எந்த விலைக்கிரயமும் கொடுக்க வேண்டியதில்லை. கடந்து செல்வதற்குத் தடை ஏதுமில்லை. "சகோதரன் பிரன்ஹாமே, அதை எப்படிச் செய்வது?" நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் மண்வெட்டியை அல்லது எதுவாயிருப்பினும் வெறுமனே கீழே போட்டுவிட்டு, அன்பாக வந்து, உங்கள் சுயாதீனத்தை இலவசமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. "சகோதரன் பிரன்ஹாம், நான் அதை இந்த விதமாகச் செய்ய வேண்டுமா, அல்லது அந்த விதமாகச் செய்ய வேண்டுமா?" நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை ஆனால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். "கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்கு விடுதலையைக் கொண்டு வந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நான் எங்கேயிருக்கிறேன் என்பதை அறியாதிருக்கையில், நிலையற்ற குழப்பமானச் சிந்தையின் அடிமைத்தனத்திலிருந்து நீர் என்னை வெளியே எடுத்தீர், நான் முயற்சி செய்து, வெவ்வேறு சபைகளில் சேர்ந்தேன். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றேன். நான் சரி செய்துகொள்ள முயன்றேன்; என்ன செய்வதென்று அறியாதிருந்தேன். ஆனால் இப்பொழுதோ, நீர் என் ஸ்தானத்தில் மரித்தீர் என்பதின் அடிப்படையில் நான் வருகிறேன். சரியாக இப்பொழுதே நான் உம்மை என் என்று மாத்திரம் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்" சொல்லுங்கள். தேவனின் அன்பு உங்கள் இருதயத்தில் எப்படியாக ஊடுருவிச் செல்லும் என்பதைக் கவனியுங்கள். எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானம் இளைப்பாறுதலை அளிக்கும். அண்டைவீட்டார் என்ன சொல்கிறார் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை, நீங்கள் எப்படியும் அவரை நேசிப்பீர்கள். 47. நீங்கள் முன்பு பேசிக்கொள்ளாதிருந்த இந்த மனிதனை நீங்கள் சந்திக்கும் போதும், பிள்ளைகளை வீதியிலிருந்து துரத்திவிடுகிற, அயலகத்தில் உள்ள மிகவும் அலங்கோலமான, மிக மோசமானஅந்தப் பெண்மணியிடமும், நீங்கள் நடந்து சென்று, "சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக" என்று கூறுவீர்கள். ஒரு மாய்மாலக் காரனாக அல்ல, நீங்கள் அதை ஒரு மாய்மாலமாகச் சொல்லு வீர்களானால், நீங்கள் இருந்ததை விட மோசமாக இருக்கிறீர்கள். நிச்சயமாக நீங்கள் அப்படித்தான். உங்கள் இருதயத்திலிருந்து அது வர வேண்டும். இயேசு பரிசேயர்களை நோக்கி "நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" என்றார். அதற்கு அவர், "மாயக்காரரே, இருதயத்தில் ஒன்றை நினைத்து, வேறொன்றைப் பேசுகிறீர்கள்." உங்களால் அதைச் செய்ய முடியாது. தேவச்சபையே, இன்றிரவு நமக்குத் தேவையாயிருப்பது என்ன, கலிபோர்னியாவுக்கு இன்றிரவு என்ன தேவையாயுள்ளது... இங்கே பாருங்கள், நாம் ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு, ஒருங்கிணைந்த முயற்சி செய்து இங்கே வருகையில், சபைகளோ, "பாருங்கள், அவர்களுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருந்தால், எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது" என்று கூறுகின்றன. 48. அன்றிரவு... நான் சொல்லவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது. இங்கே அறையில் உட்கார்ந்திருக்கின்ற என் மேலாளருக்கு அது உண்மை என்று தெரியும், அன்றிரவு காலை மூன்று மணியளவில், பரிசுத்த ஆவியானவர் என்னை எழுப்பினார். சிறிது காலத்திற்கு முன்பு நான் இங்கு வந்தபோது என்னிடம் ஒரு குறிப்பிட்ட பாப்டிஸ்ட் ஊழியக்காரர் இப்படியாகக் கூறினார், திரு.மூர் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அது யார் என்று சரியாகத் தெரியும், ஒருவேளை அந்த மனிதரும் இப்பொழுது அமர்ந்திருக்கலாம்... அவர் என்னிடம் "சகோதரன் பிரன்ஹாம், நீர் ஒரு பாப்டிஸ்டாயிருக்கிறீர், நீர் மேற்குக் கரைக்கு வரும்போது, நீர் என்ன பேசுகிறீர் என்பதைக் குறித்து கவனமாயிரும்" என்றார். "நான் தெய்வீக சுகமளித்தலைப் பிரசங்கிக்கிறேன்" என்றேன். நான் சொன்னேன்- அவர் "ஓ, சகோதரன் பிரன்ஹாமே, நான் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறேன். ஆனால் ஓ, என்னே, சனிக்கிழமை சற்றே கவனமாகயிரும். செய்தித்தாளை எடுத்துப்பாரும்" என்றார். அவர் "நீர் இதுவரை பார்த்திராத மிக மோசமான மூட மதவெறித்தனம் அதனுடன் இணைந்துவிட்டது, எல்லா வகையான கோட்பாடுகளிலும், சகல விதமான வேடிக்கை உணர்ச்சிகளிலும், எல்லா வித காரியங்களிலும் ஜனங்கள் சிக்கியுள்ளனர்" என்று கூறினார். நான் அதற்கு "ஐயா, பாரும், இது தேவனிடத்திலிருந்து வருகிறது. அதை நான் அறிந்திருக்கிறேன்" என்றேன். அதற்கு அவர், "அதை நான் சந்தேகிக்கவில்லை" என்றார். மேலும் அவர் "ஆனால், சகோதரன் பிரன்ஹாம், காரியம் என்னவென்றால்" "அது இன்னும் ஜனங்களை அதிகமாகச் சிதறடிக்கவே செய்யும்" என்றார். 49. நான் சொன்னேன் "பாரும், அது ஜனங்களை ஆசீர்வதிக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்றேன். நான் "அது அவர்களுக்கு நன்மை செய்யும் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர்கள் ஆவிக்குரிய சிந்தையுள்ள ஜனங்களாக இருப்பதால் நிச்சயமாகவே அதைக் கண்டு புரிந்துகொள்வார்கள். ஐயா, பிரிந்து கிடக்கின்ற இந்த மகத்தான பெரும் பெந்தெகொஸ்தே ஜனங்களை, நான் எல்லாவிடங்களிலும் சந்தித்த அந்த அன்பானசகோதரர்களாகிய அவர்களை ஒரே இருதயம் உடையவர்களாய், ஒருமனமுடைய வர்களாகக் காண்பதுதான் என்னுடைய வாஞ்சையாயுள்ளது" என்று கூறினேன்."மகத்தான காரியங்களில் ஒன்று அவர்களிடம் உள்ளது" என்றேன். அதற்கு அவர், "நான் அதைச் சிறிதேனும் சந்தேகிக்கவில்லை" ஆனால், "சகோதரன் பிரன்ஹாமே, தேவன் உம்மோடு இருப்பாராக" என்று கூறினார். எனவே நான் தொடர்ந்து சென்றேன்; சுமார் நான்கு இரவுகளுக்கு முன்பு, தேவன் என்னை ஒரு தரிசனத்திற்குள் எடுத்துச் சென்று தூரே லாஸ் ஏஞ்சலஸின் பரந்த காட்சியை அமைத்தார். அங்கேயிருந்த ஒவ்வொரு வகையான பருந்தும் மரத்திலிருந்து மரத்திற்கு பறந்து செல்வதையும், ஒன்றையொன்று நோக்கிக் கீச்சென்று சத்தமிடுவதையும், கூச்சலிடுவதையும் கண்டேன். அப்பொழுது நான் "இது என்னவாயிருக்கிறது ஒரு பருந்து.?... உண்மையில் அழகான பறவைதான், ஆனால் எந்தவித வஸ்துவையும் புசித்து, தன் சிறகுகளை அப்படியாக அசைத்து "நீ அதைக் கொண்டிருக்கவில்லை, நீ அதைக் கொண்டிருக்கவில்லை" என்று கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறதே" என்று எண்ணினேன். மேலும் அங்கே அங்கே உட்கார்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த மற்றொரு பருந்து, பனை மரத்திலிருந்து பனை மரத்திற்குப் பறந்து "நீ அதைக் கொண்டிருக்கவில்லை" என்று உரக்க கூச்சலிட்டது. 50. இதோ அந்த பாப்டிஸ்ட் போதகர் அங்கே தன் கனத்த தாடையுடன், கடுமையான தோற்றத்தோடு எனக்கு முன்னால் நின்று, "சகோதரன் பிரன்ஹாமே, எட்டு வருஷங்களுக்கு முன் நான் உம்மிடம் என்ன சொன்னேன்?" என்றார். நான் அவரை நோக்கி, "ஐயா, நான் மன்னிப்பு கோருகிறேன். அவர்கள் நிச்சயமாகவே புரிந்து கொள்வார்களென்று நினைத்தேன்" என்றேன். சரியாக அப்பொழுது, வியாதிகளையும் பிற காரியங்களையும் பகுத்தறிகிறதாக நீங்கள் காணும் அந்தக் கர்த்தருடைய தூதனாகிய பரிசுத்த ஆவியானவர் என் வலது புறத்தில் பேசி, "இஸ்ரவேல் புத்திரர் நிச்சயமாய் புரிந்து கொள்வார்கள் என்று மோசேயும் அப்படித்தான் நினைத்தான்" என்று உரைத்தார். 51. சகோதரரே, அது என்னவாயிருக்கிறது என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பரலோகத்தின் தேவன் உங்களை ஒருமித்துக்கூடி வரும்படிக்கு அழைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் வருகையில் கூட்டம் குறைந்து கொண்டே போகிறது. நீங்கள் என்ன செய்ய முயற்சித்தாலும் சரி, அது இன்னமும் சில மதகோட்பாட்டு குழுக்களில் அல்லது எதிலாவது ஜனங்களை அகப்படுத்திக்கொள்ளவே முயற்சிக்கிறது. சகோதரரே, உங்களுக்கு ஒருபோதும் சித்திக்காது. இன்று நான் நம்புகின்ற மகத்தான பெந்தெகொஸ்தே சபையே உன்னால் ஒருபோதும் செழிக்க முடியாது... நான் உன்னை நம்புவதால் உன்னுடன் சேர்ந்து நிற்கிறேன். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்தப் பாரபட்சமான அபிப்பிராயங்களை உடைத்துப் போட்டு, ஒரே ஐக்கியமுடைய ஜனங்களாக உங்கள் இருதயங்களை ஒன்றிணைக்க வேண்டும். அது சரிதான். அதுவே உங்களால் செய்யக்கூடிய ஒரே வழி. அன்றியும் நீங்கள் தொடர்ந்து அதைப் புறக்கணித்துக் கொண்டிருப் பீர்களானால், கடைசி சபையாகிய லவோதிக்கேயா சபைக் காலத்தை நினைவில் கொள்ளுங்கள், அது வெதுவெதுப்பான நிலையை அடைந்த படியினால், தேவன் அதைத் தன் வாயினின்று வாந்தி பண்ணிப் போட்டார். கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள். 52. இந்த மகத்தான அரங்கம் அல்லது கண்காட்சித்தளம், எந்தவொரு சபையையும் சார்ந்திராததினால், எந்த பட்சபாதமுமின்றி எல்லோரும் ஒருமித்துக் கூடிவர இயலும் என்ற காரணத்தால் தான் இன்றிரவு கிறிஸ்தவ வர்த்தகர்கள் என்னை இங்கே அழைத்து வந்தனர்; ஆனால் "இதைச் செய்யாதீர்கள். இதைச் செய்ய வேண்டாம். அவர் நம் குழுவைச் சேராமல் அந்தக் குழுவைச் சேர்ந்தவராகையால் அங்கே செல்ல வேண்டாம்" என ஒவ்வொருவரும் தங்கள் குழுக்களைப் பற்றிக்கொண்டுள்ளனர். இந்த இடமானது முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும், வெளியே நிற்கும் அளவிற்கு கூட்டம் நிறைந்திருக்க வேண்டும், இந்த மேடையில் ஊழியக்காரர்கள் நடந்துசென்று ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கி, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் நமக்கு ஒரு எழுப்புதலை தேவன் அனுப்பினார். அதனால்தான், பில்லி கிரஹாமால், தேசம் முழுதும் சென்று, ஜனங்களை ஒன்றிணைக்க முடிகிறது, ஏனென்றால் இயல்பின் படி, அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். ஆனால் என் சகோதரரே, அதைப் பார்க்கிலும் மகத்தான ஒன்று உங்களிடமுள்ளது, ஆனால் உங்களுக்கிடையில் பிசாசு நுழைந்து, உங்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி, உங்களைச் சிதைத்துவிடுகிறான். நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியவில்லையா? 53. அதன்பின் அந்த ஊழியக்காரரிடம் நான் மன்னிப்பு கோரினேன். அவர் இன்றிரவு இங்கேயிருப்பாரானால், நான் மீண்டும் மன்னிப்புக் கேட்கிறேன். அது ஜனங்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, சமயக்கோட்பாட்டு முறைகளைத் தொடங்கிவிட்டது. அனைவரும் பிசாசின் வாசனையை முகருவது, அனைவரும் பிசாசை மிதிப்பது, அனைவரும் ஏதாவது ஒன்றைச் செய்வது என்றாகிவிட்டது. ஓ சகோதரனே, அதைவிட்டு வெளியேறி, உன் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்பி வருவாயாக, சுவிசேஷத்திற்குத் திரும்புவாயாக. பூமியெங்கும் உலாவி, ஜனங்கள் மத்தியில் அசைவாடுகின்ற பழைய பாணியிலான தேவனுடைய பரிசுத்த ஆவியின் சுவிசேஷ பிரசங்கத்திற்குத் திரும்பி வருவாயாக. இன்றிரவு நமக்குத் தேவையாயுள்ளது அதுதான். இன்றிரவு நாம் கொண்டிருக்க வேண்டியது அதுவே. நான் கூறுவதைக் கேளுங்கள், நான் தேவனுடைய ஊழியக்காரனாயிருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், இன்றிரவு என் சத்தத்திற்குச் செவிகொடுங்கள். நண்பர்களே, ஏனென்றால் அது நான் என்பதனால் அல்ல, நான் தேவனுடைய வார்த்தையிலிருந்து உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறதினால் செவிகொடுங்கள். அஸ்திபாரமே இல்லாத ஒன்றை நீங்கள் அடிப்படையாகக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பசியாக இருக்கிறீர்கள், தேவனை வாஞ்சிக்கிறீர்கள். தயவுகூர்ந்து தேவனிடம் திரும்பி வாருங்கள். பரிசுத்த ஆவியானவரிடம் திரும்பி வந்து, உங்கள் ஜீவியத்தில் உள்ள சகல வெறுப்புணர்வையும் நொறுக்கி, உங்களைத் தாழ்மையுள்ள வர்களாக்கி, உங்களை மீண்டுமாய் வனைந்து, உங்களைப் புதியதாகத் தொடங்கச் செய்கிற அன்பை உங்களுக்கு அருளும்படிக்கு தேவனிடம் ஜெபியுங்கள். அப்பொழுது ஆள்மாறாட்டம் செய்து இதைச் செய்ய முயற்சிக்கும் இப்படிப்பட்ட கள்ள திராட்சச்செடிக்கேற்ற காரியங்கள் எதுவும் உங்களிடம் காணப்படாது. ஜனங்களே, ஓ, இது பரிதாபகரமானதாயிருக்கிறது. ஆமென். 54. பிரியமானவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் - நான் அவற்றைக் கூற விரும்பவில்லை. ஆனால் நான் சத்தியத்தைச் சொல்லாவிட்டால் தேவன் என்னை உத்தரவாதியாக்குவார். நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயமாக வீட்டிற்குச் சென்று, இன்றிரவு படுக்கையின் அருகே முழங்காற்படியிட்டு, இல்லையெனில் தாய் மற்றும் பிள்ளைகள் யாவரையும் அழைத்து, படுக்கை அண்டை வந்து, "தாயே, இங்குள்ள காரியங்களை தேவன் உண்மையிலேயே மாற்றிப்போடும் வரை இங்கேயே ஜெபிப்போம்" என்று சொல்ல வேண்டும். போதகர்களே, நீங்கள் இப்பொழுது ஞாயிறு காலையில் உங்கள் சபையோரை ஒருமித்து அழைத்து, "நாம் புதிதாகத் தொடங்குவோம்" என்று கூற வேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் தயவாய் நடந்துகொள்ளுங்கள். பெந்தெகொஸ்தே பிரசங்கிகளே, ஆண்களே சிலசமயங்களில் நகரத்திற்கு செல்லுகையில், நீங்கள் சிலவேளை அவர்கள் கவனியாமல் போக்குவரத்துக்குள் விரைந்து நுழைவதை செல்லுகையில், தெருவில் காண்பீர்களானால், உங்கள் நண்பர்களாகக் கருதுங்கள். அவன் ஒரு அபராதச்சீட்டைப் பெறுவதை நீங்கள் பார்த்தால்; அவன் யார் என்று எனக்குக் கவலையில்லை, சிறிது காசை அளித்து அவன் அபராதம் விதிக்கப்படாதிருக்கச் செய்யுங்கள். எல்லாவற்றிலும் அப்படியிருங்கள், அது படிப்படியாக வளர்ந்து உங்களுடைய பழக்கமாகி விடும். ஒருவருக்கொருவர் நன்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள். கைகளைக் குலுக்கி, நட்பாகவும் அருமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களைச் சுற்றியுள்ள துர்க்குணம், வேறுபாடு, தேவபக்தியற்றதுமான சகல பிரிவினையாகிய சுவர்களைத் தகர்த்து விடுங்கள், அதைத் தகர்த்து விடுங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்துகொண்டேயிருங்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் நல்லவராக இருங்கள். அப்பொழுது உங்களுக்குத் தெரியுமா முதல் காரியம் என்னவெனில், அன்பின் கட்டு உங்களை சுற்றி மூடிக்கொள்ளும் மட்டுமாக அது உங்களைச் வளரும். அல்லேலூயா. அதுவே தேவனுடைய அடையாளமிடுதலாகும். 55. தாவீது அங்கே மேலே இருந்தபோது அவனைக் குறித்து அவர் கூறினது என்ன? அவள் "உம்முடைய ஆத்துமா அன்பின் கட்டிலே கட்டப்பட்டிருக்கிறது" என்றாள். ஆமென். தாவீதைச் சந்தித்த மகத்தான ஸ்திரீயான அபிகாயில் கவணில் வைத்து "உம்முடைய சத்துருக்களோ எறிந்தாற்போல எறியப்பட்டுப் போவார்களென்று நாங்கள் அறிவோம்" என்றாள். அது சரிதான். "ஏனென்றால் நீர் தேவனின் அன்பின் கட்டிலே கட்டப்பட்டிருக்கிறீர்" என்றாள். ஓ, சகோதரனே, தீர்க்கதரிசனங்களானாலும் ஓய்ந்துபோம், சுகமளித்த லானாலும் ஒழிந்துபோம், இவை சகலமும் இருந்தாலும் ஓய்ந்துபோம், ஆனால் நிறைவானது வரும்போது, தேவனுடைய அன்பு நம்மை ஒன்றிணைக்கும். இன்று நமக்குத் தேவையாயிருப்பது என்ன... பெந்தெகொஸ்தே ஜனங்கள் பழைய பாணி மெதடிஸ்ட்டை விட அதிகம் அறிந்து முன்னே சென்றிருப்பதைப் பற்றி நாம் பேசுகிறோமே, அவர்கள் காட்சியில் எழுந்து நம்முடைய ஜீவியத்தைக் குறித்து வெட்கமடையச் செய்வார்கள். அது உண்மையென்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் வீட்டிற்கு வீடு எழுப்புதலைக் கொண்டிருந்தனர். நீங்களும் அதை ஒரு காலத்தில் கொண்டிருந்தீர்கள். அது சரிதான், ஆனால் நீங்கள் பிரிந்து செல்லத் தொடங்கிவிட்டீர்கள். இந்த விதத்தில் அமைக்கவும், இந்த வழியில் அமைக்கவும், இந்த வழியில் வரவேண்டுமென்றும் மதக்கோட்பாடுகளாலும் ஸ்தாபனங்களாலும் பிரிவினைகளை வைத்தீர்கள். நீங்கள் ஒருவரையொருவர் சகோதரராக அங்கிகரித்து ஒருவரையொருவர் நேசிக்க முடியும் வரை, நீங்கள் நாற்பதினாயிரம் சபைகளை விரும்பினாலும் பரவாயில்லை. நீங்கள் போதனையில் வேறுபாடுகள், உங்கள் ஞானஸ்நானத்தைப் பற்றிய சில காரியங்கள், இந்த எல்லாவித சிறு நுட்ப வேற்றுமைகளிருந்தாலும், அதை மறந்து ஒருவருக்கொருவர் சகோதரராக இருங்கள். அது சரி. 56. ஒரு மகத்தான ஒருங்கிணைந்த முயற்சியுடன், ஒரு எழுப்புதல் நகரத்திற்கு வரும்போது, யாவரும் சென்று அதற்கு உதவி செய்ய வேண்டும். அதுதான் வழியாயிருக்கிறது. அப்பொழுது ஊழியக்காரர்கள் ஒரு ஐக்கியத்துக்குள்ளாக ஒன்றுகூடி வந்து ஒருவருக்கொருவர் அன்புகூருவது போன்ற நீங்கள் இதுவரைப் பார்த்திராத காரியங்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். ஆமென். ஓ, அது சத்தியம் என்று நான் அறிந்திருப்பதால் நான் அவரை நேசிக்கிறேன். என்னால் அதைக் கர்த்தருடைய நாமத்தில் உரைக்க முடியும். அது கர்த்தர் உரைக்கிறதாவது. அது சரியே. அதுதான் உண்மை. நண்பர்களே நாம் அதை நிச்சயமாய் கொண்டிருக்க வேண்டும். சபையானது விருத்தி அடையுமென்றால், நம்மிடம் அது கண்டிப்பாக இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள் "பாரும், சகோதரன் பிரன்ஹாமே, நான் - நான் இதை, அதைச் சாட்சி கூறியிருக்கிறேன். நான் நீண்ட காலம் சபையைச் சேர்ந்தவன் என்று எனக்குத் தெரியும்; என் அண்டை வீட்டார் என்ன நினைப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்று சொல்லலாம். உன் அண்டை வீட்டார் என்ன நினைப்பார்கள் என்பது பொருட்டல்ல, உன் கர்த்தர் என்ன நினைக்கிறார் என்பது தான் காரியம். அது சரியே. அவர் அதைக்குறித்து என்ன சொல்லப் போகிறார்... ஓ, அந்த நித்திய நாளில் "நன்றாகச் செய்தாய்" என்று அவர் சொல்வதற்கு நீங்கள் எவ்வளவாய் விரும்புவீர்கள். 57. நான் சிறிது காலத்திற்கு முன்பு இங்கு வந்தபோது ஜனங்கள் யாவரும் தேவனுடைய மகிமையினால் பிரகாசிப்பதைக் கண்டேன். ஆனால் இன்று நான் பெந்தெகொஸ்தே ஜனங்களைக் கவனித்துப் பார்க்கையில், ஜனங்கள் மிகவும் வித்தியாசமாகி விட்டதைக் காண்கிறேன். நீங்கள் தடைவரம்புகளைத் தாழ்த்தி விட்டீர்கள்; எல்லாக் காரியங்களும் நடக்கின்றன; எல்லாவற்றையும் உங்கள் சபைகளுக்குள் வர அனுமதிக்கிறீர்கள். ஓ, அது சரிதான். இப்பொழுது பாப்டிஸ்டுகளே உங்கள் பாதங்களைத், தட்டிக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் சற்றே ஒரு நிமிஷத்தில் உங்களிடம் வரப் போகிறோம். நான் முதலில் பெந்தெகொஸ்தே ஜனங்களைப் பார்த்தபோது, முன்பெல்லாம் ஸ்திரீகள் நீளமான தலைமயிரை உடையவர் களாயிருந்தனர், அருமையாக உடையுடுத்தியிருந்தனர். ஆனால் இப்பொழுதோ அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கின்றனர்; இப்பொழுது அதெல்லாம் பரவாயில்லை என்றாகிவிட்டது. இதோ இந்தப் பொருளை உபயோகித்து, தங்கள் முகம் முழுவதும் ஒப்பனை செய்து, புருவங்களை ஒப்பனையலங்காரம் செய்து, அல்லது புருவங்களை வழித்து, தோலோடு ஒட்டிக்கொண்டது போன்ற இறுக்கமான உடையை உடுத்திக்கொண்டு, தங்களைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்றவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்களைச் சரியாக வஸ்திரம் தரிக்கவும், சரியாக ஜீவிக்கவும், சரியாகப் பேசவும், சரியாக இருக்கவும் செய்வார் என்று விசுவாசிப்பதற்கு நான் நிச்சயத்தை உடையவனாயிருக்கிறேன். ஆமென். அது சரி. 58. அதுவே உங்களுக்குத் தேவையாயுள்ளது. தேவனிடம் திரும்ப அழைத்தல். பரிசுத்த ஆவியானவர் அதை ஆதியிலே ஆக்கினை யென்று தீர்த்திருப்பாரானால், அது இன்றிரவும் அதே பரிசுத்த ஆவியாகவே இருக்கிறார், அவர் மாறுவதில்லை. இப்பொழுது, பெந்தெகொஸ்தே சபையானது தடைகளை இறக்கி, விறைப்படைந்து விட்டது. தேவனுடைய சமுகத்திற்கு மீண்டும் திரும்ப அழைக்கிற ஒரு பழைய பாணியிலான அழைப்புதான் நமக்குத் தேவையாயிருக்கிறது. அது சரியே. அது சரி என்று உங்களுக்கும் தெரியும். ஆம் ஐயா. நீண்ட காலத்திற்கு முன்பு, அது வித்தியாசமாக இருந்தது. ஆனால் என்ன நேரிட்டது? அதனால்தான் நீங்கள் குளிர்ந்து போயிருக்கிறீர்கள். தேவசித்தத்திற்குப் புறம்பாக இருக்கிறீர்கள். ஆகையால்தான் அதனால்தான் நீங்கள் நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க இயலவில்லை. நீங்கள் உங்கள் கர்த்தர் மீது கவனம் செலுத்துவதைப் பார்க்கிலும், உங்கள் ஸ்தாபனங்களுக்கு அதிக கவனம் செலுத்துகிறீர்கள். அது முற்றிலும் சரியே. ஒவ்வொருவரும் நகரத்திலேயே மிகப்பெரிய சபையைக் கட்ட முயற்சிக்கின்றனர். ஒருவர் மற்றவரை விடச்சிறந்து விளங்க விரும்புகின்றனர். தேவன் சபைகளைப் பற்றி கொண்டுள்ள கவலை என்ன? இயேசு சீக்கிரம் வருகிறார் என்றால், பணத்தைத் தொலைவில் உள்ள ஊழியக்களங்களில் எங்காவது உபயோகிப்பதற்குப் பதிலாக, நீங்கள் ஏன் இந்த பிரமாண்டமான பெரிய கட்டிடங்களைக் கட்டி அதற்காக பல லட்சக்கணக்கான டாலர்களை செலவிடுகிறீர்கள்? ஆமென். 59. இயேசு வருகிறார் என்றால், நாம் அதற்கேற்றபடி நடப்போம், அதற்கேற்றபடி பேசுவோம், அதற்கேற்றபடி ஜீவிப்போம், அதற்கேற்ற படியே இருப்போம். துவக்கத்திலேயே ஏதோ சரியாகத் தொடங்க வில்லையென்று சொல்வதற்குத் தூண்டப்படுகிறேன். ஆமென். ஓ, என்னே, நான் அதைச் சொல்ல வெறுக்கிறேன். ஆனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடினமாக என்னிலிருந்து அது உந்தித் தள்ளப்படும்போது, என்னால் எப்படி அதைச் சொல்லாமல் தவிர்க்க இயலும்? அது சரிதான். ஜனங்களை அடையாளமிடுதல், விசுவாசதுரோகத்தின் முத்திரை, அவிசுவாசித்தல், தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்துகொள்வது... அது சரி. மேலும் ஜனங்கள் கீழ்த்திசையிலிருந்தும், மேற்றிசையிலிருந்தும், வடதிசையிலிருந்தும், தென்திசையிலிருந்தும் தேவனுடைய வார்த்தைக்காகப் பசியுடன் திரிந்தும், அதைக் கண்டடை யாமற்போவார்கள். அவர்கள் பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்று "பாருங்கள், நான்..." என்பார்கள். முதலில் அவர்கள் பாப்டிஸ்டு சபைக்குச் செல்லுவார்கள். அவர்கள் செல்லுகையில், ஒருவர் இதைக் கொண்டுள்ளனர், மற்றவர் அவர்கள் எல்லாரும் அதைக் கொண்டுள்ளனர். அவர்கள் வேறுபட்டிருக்கின்றனர், பின்பு அவர்கள் பெந்தெகொஸ்தே யினரிடம் திரும்பி வருகின்றனர்; அவர்களும் எல்லாரும் வேறுபட்டிருக்கின்றனர். நாம் ஒன்றாக இருக்க வேண்டும். ஆமென். 60. பாருங்கள், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை நேசிக்கிறேன். மேலும் நீங்கள் ஆள்மாறாட்டங்கள் இல்லாத மெய்யாகவே, கலப்பற்ற உண்மையான வரங்களைக் காண விரும்பினால், அவர்களைப் போன்று இருக்கும்படியாக உலகம் தாகம் கொள்கின்ற அளவுக்கு மிகவும் உப்பாக நடக்கின்ற உண்மையான, உறுதியான கிறிஸ்தவர்களைப் பார்க்க விரும்பினால்... ஏன், என்னே, நீங்கள் தெருவில் சென்று கிறிஸ்தவர்கள் என்றால் என்ன என்று இனிமேல் சொல்ல முடியாதவாறு ஜனங்களுடைய வழிகள் உள்ளன. அது சரிதான். அவர்கள் அனைவரும் வீதிக்குச் சென்று ஒரே விதமாக நடந்துகொள்கின்றனர்; ஒரே மாதிரியாகப் பேசுகிறார்கள். எல்லா நேரத்திலும், நீங்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நீங்கள் கணக்கொப்புவிக்கவேண்டும் என்று தேவன் உரைத்திருக்க, அவர்களோ எப்போதும், எல்லாவிதமான கேலி கிண்டல், அப்படிப்பட்ட எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்கின்றனர். என்ன சம்பவித்து விட்டது? ஏனென்றால் சகோதரனே, பிசாசு வந்து, உன் கண்களைக் குருடாக்க நீ அனுமதிக்கிறாய். நீ எதிர்பாராத, ஒரு வேளை வரும்போது, தேவன் உனக்கு ஒரு செய்தியை அளிப்பார், அப்பொழுது நீ ராஜ்யத்திற்கு உள்ளே அல்லது ராஜ்யத்துக்குப் புறம்பே முத்திரையிடப்படுவாய். ஆமென். 61. பண்டைய பாணியிலான சுவிசேஷம் சபையில் மீண்டும் நமக்குத் தேவையாயிருக்கிறது. இந்த அநேக விதமான அர்த்தமற்றவைகளும், மதியீனமானவைகளும் அறுத்தெறியப்பட்டு தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புதல் அவசியமாயிருக்கிறது. ஆமென். ஓ, என்னே, இந்த தேசம் முழுவதும் என்னவெல்லாம் செய்யப்படுகிறது. இங்கே நம் தேசத்தில், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு காரியத்தின் நிமித்தம் நீங்கள் பெந்தெகொஸ்தே என்று குறிப்பிடக்கூட முடியாமல் ஆகிவிட்டது. விமானங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக வந்து அங்கேயிருக்கும் ஏழை ஜனங்களிடமிருந்து ஆயிரமாயிரக் கணக்கான டாலர்கள் பறிக்கப்படுகின்றன. ஒரு சிறிய விமானம் கூட வாங்கவேயில்லை, அப்படிப்பட்ட அநேக காரியங்கள் நடக்கின்றன. பகட்டான அலங்காரமுடைய பெரிய, நீண்ட காதணிகளை அவ்வாறு தொங்கவிட்டுக் கொண்டு மேடைக்குச் செல்லுகின்றனர். நான்கு மிஷனரிகளை கடல் கடந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுப்புவதற்குப் போதுமான விலைமதிப்புடைய ஆபரணங்களைத் தங்கள் விரல்களில் அணிந்துகொள்கின்றனர்... அங்கேயுள்ள ஏழை ஜனங்களோ தேவனுடைய வார்த்தையைக் கேட்கப் பட்டினி கிடக்கின்றனர், அப்படியிருக்க நாம் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கிறோமே? சகோதரா, ஏதோ தவறாயிருக்கிறது. அது உண்மைதான். 62. மற்ற எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கின்ற நமக்கு, ஜெபக்கூட்டங்களுக்கு நேரம் இல்லை. குடும்பங்கள் சிதைந்துபோய் விட்டன, சிறுபெண்களும் பையன்களும் வெளியே சென்று, ஊரெங்கும் சுற்றித்திரிகின்றனர், தாயும் தகப்பனுமோ அக்கறையற்றவர் களாயிருக்கின்றனர், இப்படி இருந்துகொண்டு தங்களை பெந்தெ கொஸ்தேயினராகக் கருதுகின்றனர். வேதாகமம் வாசிக்கப்பட்டு. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையானது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் படுகிற, தேவன் இருக்கின்ற ஸ்தலமான, ஒரு குடும்ப பலிபீடம் வீட்டிலே இன்றிரவு நமக்கு அவசியமாயிருக்கிறது. ஆம் ஐயா. தோல் வெளியே உள்ளதுபோலத் தோற்றமளிக்கும் மிக இறுக்கமான சிறு உடைகளை உடுத்திக்கொண்டு மேடையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். அதை நான் கேலியாகச் சொல்லவில்லை. நான் கேலி செய்யவில்லை; இது சுவிசேஷ சத்தியமாயிருக்கிறது. அது சரிதான். ஆம் ஐயா. அவ்விதமாக மேடைகளில் அங்குமிங்கும் ஓடி, அந்நியபாஷைகளில் ஆவியில் நடனமாடிக்கொண்டும், பேசிக் கொண்டும், காதணிகளை அணிந்து, தங்கள் முகங்கள் முழுவதும் வருணம் பூசிக்கொண்டு, தங்கள் தலைமயிரை அப்படியாகக் குட்டையாகக் கத்தரித்து, அலங்காரம் செய்து, இப்படியாக நடந்து கொண்டு பின்பு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். 63. அண்மையில், ஒரு பெரிய பரிசுத்த அமைப்பைச் சேர்ந்த மனிதன் என்னைத் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்த விரும்பினார். "சகோதரன் பிரன்ஹாம், என் மனைவி இன்றிரவு பியானோ வாசிக்கப் போகிறாள்" என்றார். அப்பொழுது நான் அவளை நோக்கிப் பார்த்தேன், அந்த ஸ்திரீயை... நான் அந்த ஸ்திரீயைப் பரியாசம் பண்ணவில்லை; பரியாசம் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் உண்மையை மாத்திரமே சொல்லுகிறேன். நீங்கள் அதை அதே அன்பின் வழியில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். நான் அவ்வப்போது கண்டிப்புடன் இருந்தாக வேண்டும். ஆம் ஐயா. அந்த ஸ்திரீ ஒரு உடையை உடுத்தியிருந்தாள், என் மனைவி அப்படி உடுத்தியிருப்பதைப் பார்த்தால், நான் அவளை விவாகரத்து செய்துவிடுவேன். அது முற்றிலும் உண்மையாகும். நான்... நான் அவளைத் தள்ளிவிடுவேன். அந்த ஸ்திரீ அப்படியாகத் தன் முகம் முழுதும் வருணம் தீட்டியிருந்தாள், மேலும் நான் "அவள் ஒரு கிறிஸ்தவளா?" என்று கேட்டேன். ஓ. "அவள் ஒரு பரிசுத்தவாட்டி" என்றார். நான் அதற்கு, "எனக்கு ஒரு பேய்போலத் தோற்றமளிக்கிறாள்" என்றேன். அது சரி, அதுபோன்ற கேலியாகச் சொல்லவில்லை. ஆனால் அது தான் உண்மை. ஒன்றைப் பார்ப்பதற்கு அப்படித்தானிருக்கிறது. நான் அதைக் வருணம் தீட்டப்பட்ட ஒரு யேசபேல் போல. ஆண்களைச் சந்திப்பதற்கு தன் கண்களுக்கு மையிட்ட ஒரே ஸ்திரீ யேசபேல் மட்டுமே, தேவன் அவளை நாய்கள் தின்னும்படிச் செய்தார். அது சரியே. ஆகையால் அது துவக்கத்திலேயே ஒரு நாயின் உணவாக இருப்பதை மறந்துவிடாதீர்கள். பீடத்திற்குத் திரும்பி வா, அப்பொழுது தேவன் உன் முகத்தைக் கழுவச்செய்து சரி செய்துகொள்ள வைப்பார். 64. இப்பொழுது, பிரசங்கிகளே, புருஷர்களே, உங்களுக்கும் அதேதான். அது சரி. அது தான் உண்மை. சரியான பண்டைய பாணியிலான, கடுமையான, சுவிசேஷ பிரசங்கமே இன்று நமக்குத் தேவை. வெண்ணெய் அகற்றப்பட்ட, பலவீனமான புளித்துப்போன பால் போன்ற பிரசங்கங்கள் நிறைய உண்டு. அசூசாவுக்குத் திரும்புதல், ஆதிக்குத் திரும்புதல், பெந்தெகொஸ்தேவுக்குத் திரும்புதலே நமக்குத் தேவையாயிருக்கிறது. அது சரிதான். ஆமென். தேவன் இரக்கமா யிருப்பாராக. ஓ, நம் சபையில் மகிமை இல்லாதிருப்பது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா, அது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் நாம் வேறு ஏதோவொன்றிற்குள் சென்றுவிட்டோம். ஓ, "இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன், இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது." அது உங்களை மூட மத வெறியர்களாக ஆக்காமல், உங்களை சொஸ்தபுத்தியுள்ளவர் களாகவும் உண்மையானவர்களாகவும் உருவாக்கி, ஜனங்கள் உங்களைப் போல இருக்கும்படிக்கு தாகம் கொள்ளும் அளவுக்கு மிகவும் அசலானவர்களாக ஆக்குகின்றதாயுள்ளது. அது சரி. முழு உலகமும் நோக்கிப் பார்த்து, "என்னே, நான் மாத்திரம் அந்த ஸ்திரீயைப் போல நடந்துகொள்ள முடிந்தால். அவள் வாழ்கிற ஜீவியத்தை என்னால் வாழ முடிந்தால்" என்று கூறுவார்கள். இப்பொழுது, அதுதான் நமக்கு அவசியமாகும். 65. இங்கே சிறிது காலத்திற்கு முன்பு, ஒரு ஸ்திரீ தன் பெண் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பினாள், அவள் நாட்டுப்புறத்திலே வசித்தாள், மேலும் பெண்பிள்ளையை தூரே பள்ளிக்கு அனுப்பிவிட்டாள். இளம்பெண் அங்கே சென்று இறங்கினாள்; அவள் வீட்டை விட்டுச் சென்றபோது ஒரு அருமையான கிறிஸ்தவப் பெண்ணாயிருந்தாள். அப்படியாக எல்லாவற்றையும் செய்து கொண்டி ருக்கின்ற, ஹாலிவுட் குழுக்கள் மத்தியில் அவள் சென்றாள். பின்பு அந்த இளம்பெண் திரும்பிச் சென்று தன் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக்கொள்ளலாமா என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள் "தேனே, நீ அதைச் செய்ய நான் விரும்பவில்லை. அதைப் போன்று நடந்துகொள்ளாதே" என்றாள். நான் இதைப் பெந்தெகொஸ்தே சபையுடன் மாதிரியாக அல்லது ஒப்புமை அடையாளப்படுத்திக் காண்பிக்கப் போகிறேன். நீங்கள் மிகவும் அர்த்தமற்ற மதியீனமான காரியங்களுடன் சென்று, உலகத்துடன் மிக அதிகமாகக் கலந்துவிடுகிறீர்கள். முற்றிலும் சரியே. நீங்கள் உலகத்தைப் போல நடந்துகொள்கிறீர்கள், உலகத்தில் ஜீவித்து,அப்படிப்பட்ட காரியங்களைச் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்தை உங்களிலிருந்து புறம்பே தள்ளுங்கள். "நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவை களிலும் அன்புகூர்ந்தால், உங்களிடத்தில் தேவனின் அன்பில்லை" என வேதம் உரைக்கிறது. அது சரிதான். அது தான் சத்தியம். 66. மேலும் அந்தப் பரிதாபமான இளம்பெண், தன் சகவாசிகள் சிலருடன் கலந்துபழகினாள். அவள் அப்படிச் சென்றது ஏன்? ஏனென்றால் அவள் அந்த விதமான ஒரு கூட்டத்தில் சேர்ந்தாள். கவனியுங்கள், எல்லாவற்றிற்கும் ஒரு ஆவி இருக்கிறது. ஒரு தேசத்திற்கு ஒரு ஆவி இருக்கிறது. நீங்கள் இந்த தேசத்திற்குள் செல்லும்போது, அது ஒரு ஆவியைக் கொண்டுள்ளது. இந்த தேசம் என்ன ஆவியைக் கொண்டிருக்கிறது? பொழுதுபோக்கு என்ற ஆவியைக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் இருப்பதெல்லாம், "சூசியை முத்தமிட்டது யார்" அல்லது அன்றிரவு அதுபோன்ற மாத்திரமே. ஜனங்கள் சபைக்குச் ஏதோவொன்று செல்வதற்குப் பதிலாக, யாரது-சூசியைப் பற்றி அல்லது ஏதோவொன்ற தொலைக் காட்சியில் அதுபோன்ற பார்ப்பதற்காக வீட்டிலேயே இருந்து விடுவார்கள், ஆனால் தாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள தாகவும், அந்நிய பாஷைகளில் பேசுவதாகவும் கூறிக்கொள்கிறார்கள். சகோதரனே, அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். அது என்ன - யார்? லூசி, லூசியைப் பற்றிய ஏதோ, அல்லது "நான் லூசியை நேசிக்கிறேன்" என்பது போன்ற ஒன்று. அதுபோன்ற சில நிகழ்ச்சிகள். அவளுடைய முட்டாள்தனத்தை நான் பார்ப்பதில்லை. நான் என் வேதத்தை வாசித்து, கர்த்தரைச் சேவிப்பதையே நேசிக்கிறேன். ஆமென். ஆம் ஐயா. ஆமென். அதுதான் இன்று நமக்குத் தேவையாயுள்ளது. அதனால்தான் நீங்கள் தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாகச் செல்கிறீர்கள். அங்கேதான் நீங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறீர்கள். நீங்கள் உங்கள் அயலானை வெறுத்து, மற்ற எல்லாவற்றையும் செய்தும், இன்னும் அப்படியே தொடர்ந்து செல்லுவதில் வியப்பொன்றுமில்லை. தேவனின் அன்பை உன் இருதயத்தில் வைத்துக்கொண்டு உன்னால் அதைச் செய்ய முடியாது. அது சரிதான். ஆமென். 67. இப்பொழுது, அவர்கள் அதற்காக வீட்டிலே தங்கியிருக்கிறார்கள், அன்றியும் தங்களை பக்தி வாய்ந்தவர்கள் என்று அழைத்துக்கொண்டு, இன்றைக்கு ஜனங்கள் செய்யும் காரியங்கள், வெட்கக்கேடானது. அவர்கள் உலகத்தைப் போலவே நடந்துகொள்கிறார்கள், ஏனென்றால் அது அமெரிக்காவின் ஆவியாயிருக்கிறது. அமெரிக்கா பொழுது போக்கை நாடுகிறது. ஓ, எல்லாம், எல்லாரிடமும் தொலைக் காட்சிகளும் வானொலிகளும் உள்ளதால், அவர்கள் எல்லாவற்றையும் கேட்கிறார்கள். நான் ஒரு மனிதனின் வீட்டிற்குள் செல்லட்டும், அவன் என்ன விதமான இசையைக் கேட்கிறான் என்று பார்க்கட்டும். நான் சுற்றிலும் நோக்கிப் பார்த்து, அவன் எந்த விதமான நூலை வாசிக்கிறான் என்று காணட்டும்; அப்பொழுது அவன் என்ன விதமான ஆவியைப் பெற்று அவற்றால் போஷிக்கப்படுகிறான் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அது சரியே. தன் அன்றாட நடத்தையில் அவன் நடந்துகொள்கிற விதத்தை நான் கவனித்துப் பார்க்கட்டும். உண்மைதான். அது ஒரு அவமானகரமானது. என்னே, சபையானது எப்படியாய் கிருபையிலிருந்து விழுந்திருக்கிறது. ஓ, என்ன ஒரு பரிதாபகரமாயிருக்கிறது. மனந்திரும்பி, திரும்ப வாருங்கள். அது சரிதான். அதை நான் கர்த்தருடைய நாமத்தில் சொல்லுகிறேன்: மனந்திரும்பி திரும்ப வாருங்கள். 68. கவனியுங்கள், அதன்பின் அந்த இளம்பெண், அங்கே சென்றபோது, அவள் அந்த ஆவிக்குக் கீழ்ப்பட்டவளானாள் நீங்கள் இங்கே செல்லுவீர்களானால், ஒரு சபையின் ஆவியைப் பெறுவீர்கள். நீங்கள் - உங்களுக்குத் தெரியுமா முதலாவது காரியம், நீங்கள் ஒரு சபைக்குள் செல்லும்போது, அதன் மேய்ப்பனைக் கவனியுங்கள். இதை நான் மரியாதையுடன் சொல்லுகிறேன். அந்த மேய்ப்பன் நடந்துகொள்ளும் விதத்தை நீங்கள் கவனித்துப்பாருங்கள், அந்த ஜனங்களும் சற்றேறத்தாழ அதே விதமாக நடந்துகொள்வதைக் காண்பீர்கள். மேய்ப்பன் முழுவதும் பகட்டாக ஆசாரவிறைப்புடன் நடந்து கொள்பவராக இருந்தால், அவருடைய சபையாரும் அதே விதமாகவே இருப்பதைக் காண்பீர்கள். மேய்ப்பன் அநேக அர்த்தமற்ற காரியங்களுடன் தொடர்ந்து செல்பவராயிருந்தால், சபையாரும் அதே வழியில் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அந்த மேய்ப்பன் ஒரு நல்ல, திடமான, சுவிசேஷ போதகனாகஇருந்து, தன் பிள்ளைகளுக்கு தேவைப்படும்போது அவர்களைப் பிடித்து அடி வைத்தியம் கொடுக்கிற (அது சரி), அவர்களைச் சுவிசேஷத்தைக் கொண்டு சரியாகக் கண்டித்து உணர்த்துபவனாக இருந்தால், ஜனங்கள் வந்து சுவிசேஷத்தில் களிகூரக்கூடிய ஒரு நல்ல கீழ்ப்படிதலுள்ள சபையை நீங்கள் காண்பீர்கள் (அது சரியே). அவன் வார்த்தையின் மேல் நிலைத்திருக்கிற, வார்த்தையில் தரித்திருக்கிற ஒரு நல்ல பிரசங்கி என்றால், அதை அப்படியே கூறி, அவனுடைய சபை இப்பேர்ப்பட்ட கொள்கைகளுக்குள் நுழையாமல், உண்மையாகவே பரிசுத்த ஆவியினால் இயக்கப்படுவதைப் பார்ப்பான். அவர்கள் எதையாவது தொடங்குவார்களானால், அதை உடனே அப்படியே பறித்து நீக்கிவிடுவான். அதைப் போன்ற இன்னும் சில பிரசங்கிகள் தான் இன்று நமக்கு அவசியமாயுள்ளனர். ஆமென். ஸ்திரீகள் தங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டனர், இப்பொழுது பிரசங்கிகளே, நாம் நமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்வோம். அது சரி, அதுதான் நமக்குத் தேவை. 69. அந்த ஆவியை, நீங்கள் ரஷ்யாவுக்குச் செல்லும்போது, நீங்கள் ஒரு ஆவியைக் காணலாம். ஜெர்மனிக்குச் சென்றால், ஒரு ஆவியைக் காண்கிறீர்கள். ஒரு நிறுவன அமைப்புக்குச் சென்றால், ஒரு நற்கொற்றர் அமைப்பினரின் (Mason Freemason) ஆவியை, நட்புறவுக் குழுவின் ஆவியை (Odd Fellow) போன்ற ஒரு ஆவியைக் காணலாம். நீங்கள் ஒரு வீட்டிற்குள் செல்லும்போது, அவ்வீட்டின் ஆவியைக் காண்கிறீர்கள். நீங்கள் ஒரு நல்ல அருமையான ஸ்திரீயை அழைத்துச் சென்று, சில போக்கிரி கயவர்களுடன் விடுவீர்களானால், அவள்... கயவர்களான அவர்கள் நல்லவர்களாகி விடுவர் அல்லது அவள் அவர்களைப் போல மாறிவிடுவாள். நீங்கள் உங்களை இருக்க அனுமதிக்கும் இடத்தைப் பொறுத்தது. அது முற்றிலும் உண்மையே. நான் அதை ஆயிரக்கணக்கான நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் சுற்றித்திரியும்போது, அவர்களுக்கும் இது பொருந்தும். உன் தோழனை எனக்குக் காண்பி, அப்பொழுது நீ யார் என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். அது சரிதான். உலகத்துடன் நம்மை இணைத்துக் கொள்ளாதிருப்பதுதான் நமக்குத் தேவையாயுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் இணக்கமுடையவர்களாய் இருக்க வேண்டும். நாம் உலகத்தை விட்டு விலகிச் செல்வோமானால், ஒருவேளை நம் இருதயங்களை ஒன்றாக இணைத்துக்கொள்ள இயலும். ஆமென். ஆமென். அது சரிதான். 70. இந்தப் பரிதாபமான சிறுபெண், அவள் வீட்டிற்கு வருவதாகக் கூறினாள், அவள் திரும்பி வரும்போது தன் சூசி தோழிகளில் ஒருத்தியைத் தன்னுடன் அழைத்து வந்தாள். அவளுடைய தாய் அவள் திரும்பி வருகின்ற வழியில் நிலையத்தில் (ரயில் நிலையம்) அவளைச் சந்திப்பதாகக் கூறியிருந்தாள். பின்பு அவர்கள் வரும்போது. அவள் "ஓ, நீ என் தாயைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன், நீ அவரைப் பார்க்கும்போது" என்றாள். எனவே அவர்கள் அங்கு வெளியே பார்த்தார்கள், உங்களுக்குத் தெரியுமா முதலாவது, அவளுடைய தாய் அங்கே நின்றுகொண்டிருந்தாள். அவளுடன் இருந்த அந்த இளம்பெண் "ஓ, மேரி, அங்கேயிருக்கிற அந்த விகாரமான தோற்றமுடைய மூதாட்டி யார்?" என்று கேட்டாள். அவள் முகம் முழுவதும் வடுக்கள் நிறைந்திருந்தது, சிறிதளவு அவள் தலையின் பின்னால் ஒட்டிக் தலைமுடி கொண்டிருந்தது, மலிவான பருத்தி உடையைத் தரித்தவாறு அவள் இப்படியாகக் குனிந்து, நடுங்கிக்கொண்டிருந்தாள். "அங்கேயிருக்கும் அந்த அருவருப்பான கிழவியைப் பார். அது யார்?" என்று கேட்டாள். அப்பொழுது அந்த இளம்பெண், அது தன்னுடைய தாய் என்பதை ஒப்புக்கொள்ள வெட்கமடைந்தாள். ஏனென்றால் அவள் தன் இனத்தையே பட்சிக்கும் சுபாவமுடையவர்கள் மத்தியில் சேர்ந்திருந்தாள். ஆசாரவிறைப்பான, எல்லாம் அறிந்தது போல நடக்கிறவர்கள் மத்தியில் கலந்திருந்தாள். 71. இன்று சபையும் அதைத்தான் செய்துள்ளது: வேத கலாசாலைகளில் பயின்று, சகலமும் அறிந்ததாக நினைக்கும் பெரிய மதசாஸ்திரிகளின் மத்தியில் சேர்ந்துவிட்டதால் நீங்கள் கிட்டத்தட்ட மரிக்கப்போகிற கன்றுக்குட்டியைப் போல "ஆமென்" என்று சத்தமிடுகிறீர்கள். அதன் பின்பு என அழைத்துக் அவர்கள் தங்களைப் பிரசங்கிகள் கொள்கின்றனர். உலகத்திலுள்ள எல்லா தெய்வீக தத்துவ பட்டங்களைப் பெற்றிருப்பதைப் பார்க்கிலும், உடைபயிறுக்கும் காப்பிக்கொட்டைக்கும் வித்தியாசம் தெரியாதிருப்பினும் ஆனால் ஆத்துமாக்களின் இரட்சிப்பில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கிற, ஒரு பையனை ஒரு பிரசங்கியையே என் பிரசங்கபீடத்தில் கொண்டிருக்க விரும்புவேன். ஆமென். அது சரியே. அதை நான் உண்மையாகச் சொல்லுகிறேன். இன்று நமக்குத் தேவை என்னவென்றால், தூரே கோரைப்புல் மலைக்குச் சென்று தேவனிடம் தரித்திருந்து ஜெபிக்கக்கூடிய, சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படாமல், அதைப் பிரசங்கித்து, சத்தியத்தில் நிலைத்து நிற்கும், ஒரு நல்ல பழைய பாணியிலான, தேவனால் அழைக்கப்பட்ட மனிதனே. ஆமென்! 72. பிறகு, அவள் வந்து இரயிலிலிருந்து இறங்கி, வெளியே சென்றபோது, அவளுடைய ஏழ்மையான தாய் அவளைக் கட்டிக்கொள்ள ஓடினாள். ஆனால் அந்த இளம்பெண்ணோ தன் தாயிடம் புறமுதுகைக் காட்டினாள். அவளிடம் ஆசாரவிறைப்பான காரியம் இருந்தது; அவளுடைய தாய் அவ்வளவு கவர்ச்சித் தோற்றமுடையவளாக, அப்படியாக இல்லாதிருந்தாள். இன்றைக்கு ஜனங்களும் இயேசு கிறிஸ்துவை நடத்தும் விதமும் இவ்விதமாகவே உள்ளது. அவர்கள் பழம்பாணியிலான முறையை விரும்புவதில்லை, பீடத்தண்டை வந்து, தங்களைச் சுத்தமாக்கிக் கொள்வதை, பரிசுத்தவானைப் போல உடை உடுத்துவதை, பரிசுத்தவானைப் போல நடந்துகொள்வதை, தேவபக்தியுடன் நடப்பதை ஜனங்கள் விரும்புவதில்லை. அவர்களுக்குப் பொழுதுபோக்குகள், விருந்துகள், சீட்டாட்ட கேளிக்கைகள், தையல், தைக்கும் குழுக்களில் திருமதி இன்னார் இன்னாரைப் பற்றிப் பேசுவது, அங்குமிங்கும் திரிவது போன்ற எல்லாக்காரியங்களுமே அவர்களுக்கு தேவையாக உள்ளது. இந்தச் சிறு ஸ்தாபனங்கள் அனைத்தும், நீங்கள் உலக சபைகளைப் போலவே அமைக்கப்பட்டிருக்கிறீர்கள். அது சரியே. நீங்கள் மீண்டும் பீடத்திற்குத் திரும்பி வந்து, உங்களைச் சரிசெய்து கொள்ள வெட்கப்படுகிறீர்கள். 73.முதலாவது உங்களுக்குத் தெரியுமா, அந்த இளம்பெண் தன் தாயை மறுத்துத்தள்ளி, பகட்டான பெருமையுடன் ஒதுங்கி நடந்து சென்றதைக் கண்ட உடனே, அங்கேயிருந்த ஒரு நடத்துநர், காரணத்தை அறிந்திருந்த அவர், அங்கிருந்த ஒரு பெட்டியின் மேல் ஏறி நின்று "ஜனங்களே, இங்கே கவனியுங்கள். அந்த ஏழை ஸ்திரீ கண்ணீர் விட்டு அழுகிறதைப் பார்க்கிறீர்கள் அல்லவா?" தன் சொந்த மகள், அவளை புறக்கணித்துத் திரும்பிச் சென்றதை அவர் கண்டபோது, அவர் கூறினார், "இதோ பார், இளம்பெண்மணியே, அது உன் தாயார். அவள் எப்படி இருந்தாலும் எனக்கு அதைக்குறித்துக் கவலையில்லை; அவள் உன் தாயாக இருக்கிறாள்" என்றார். அவர் சொன்னார் "இந்தச் சம்பவம் நடந்தபோது, நான் அவர்களின் அயல் வீட்டில்தான் வசித்தேன். ஜனங்களே, தன் ஏழையான, தழும்புகள் நிறைந்த தோற்றமுள்ள தாயை மறுதலித்து விட்டு, இங்கே நிற்கிறாளே இந்தச் சிறுபெண். அநேக வருஷங்களுக்கு முன்னால், நான் அவளுடைய அயல் வீட்டில்தான் வாழ்ந்தேன்" "அவளுடைய அம்மா வீட்டின் பின்புறத்தில் துவைப்பதற்கு, தண்ணீர் கொண்டு வருவதற்காக ஊற்றண்டை சென்றிருந்தாள். அப்பொழுது ஒரு தீக்கனல் வீட்டில் விழுந்து, வீடு நெருப்பு பற்றிக்கொண்டது." 74. அவர் கூறினார் "அவள் அவ்வளவு அழகான சௌந்தரியமுடைய ஸ்திரீயாக இருந்தாள்." மேலும் கூறினார், "அவளுடைய தாய் இரண்டு வாளிகளில் தண்ணீருடன் திரும்பி வந்தபோது... அவள் அங்கே பார்த்தபோது, வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அயலகத்தார் ஓடிக் கொண்டிருந்தனர். ஆனால் நெருப்பு முழுவதும் எரிந்து பரவியிருந்தது." மேலும் கூறினார், "அவள் குழந்தை மேல்வீட்டில் இருந்தது; தொட்டிலில் கிடத்தியிருந்த அந்தக் குழந்தைதான் இவள்." பின்னும் கூறினார், "அந்தத் தாய், துணி உலர்த்தும் கொடியிலிருந்த போர்வையை இழுத்து, அதைத் தன்மேல் சுற்றிக்கொண்டு, முகத்தைச் சுற்றிக் கொண்டு, தன் பிள்ளையைக் கண்டுபிடிக்கத் தீக்குள்ளாக ஓடினாள்." அவர் மேலும் கூறினார் ""திரும்பிவா, திரும்பிவா' எனத் தீயணைக்கும் படைவீரரும் மற்ற யாவரும் கூச்சலிட்டனர், ஆனால் அவளை எதுவுமே நிறுத்தமுடியவில்லை. அவள் குழந்தையைப் பற்றிக்கொள்ளும் படிக்கு தொடந்து முன்னே சென்றாள்; இல்லையெனில் அது மரித்துவிடும். அவள் குழந்தை கதறிக்கொண்டிருந்த இடத்திற்கு அவள் சென்றபோது, தன்னுடைய அழகான முகத்தை மூடியிருந்த போர்வையை அவிழ்த்து, அந்தக் குழந்தையை அதில் சுற்றினாள்." மேலும் அவர் கூறினார் "தீப்பிழம்புகளால் அவள் முகம் வெந்துபோய், அவளுடைய தலைமயிர் எரிந்து கருகிவிட்டது. அவளது முகம் எரிந்து கருகிப் போனது" என்றார். பின்னும் அவர் "நீ இன்று அழகாகவும் உன் தாய் அலங்கோலமாகவும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நீ அழகாக இருக்குபடிக்கு அவள் அலங்கோலமாக்கப்பட்டாள். ஆனால் இப்போது, நீயோ அவளைக் குறித்து வெட்கப்படுகிறாய்" என்றார். 75. இன்றிரவும் அதே காரியம்தான் சம்பவிக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் உங்கள் மதசாஸ்திரங்களையும் கோட்பாடுகளையும் எவ்வளவு விரும்பினாலும் பிரசங்கிக்கலாம், ஆனால் என் கர்த்தராகிய இயேசு, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மாம்ச ரூபமெடுத்து, தன்னையே தாழ்த்தி, மாம்ச சரீரத்தில் உலகத்திலே வந்து. பரிகசிக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, அதோ கல்வாரியில் ஒரு குற்றவாளியாகத் தொங்கினார். தம்மைத்தாமே வெறுமையாக்கி, என் இரட்சகராகும்படி இறங்கி வந்தார். அவர் மரித்ததால் நான் ஜீவிக்கிறேன். அதைக்குறித்தச் சத்தியத்தைச் சொல்லுவதற்கும், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கும் ஒரு கோழையாக இருக்கும் ஸ்தானத்தில் என்னை வைக்க ஒருபோதும் விரும்பவேமாட்டேன், மாத்திரமல்ல, இப்பூமியில் உள்ள என் நண்பர்கள் எல்லாரையும் நான் இழக்க நேரிட்டாலும் அது பொருட்டல்ல, ஆனால், நான் மகிமையில் அவருடன் நட்பைக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். அந்நாளில், அவர் கீழ் நோக்கி "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே" என்று கூறுவார். ஆமென். என் இருதயத்தோடும் அவரில் அன்புகூருகிறேன். மேலும் நான் - நான் அறிவேன்... நீங்கள் கைகளைக் குலுக்குதல், சபையைச் சேர்ந்துகொண்டு, மத போதனைகளை உபதேசித்தல், இந்தப் பலவிதமான ஜெபங்களைத் திரும்பத் திரும்பக் கூறுதல் போன்றவற்றைச் செய்துகொண்டிருக்கலாம். ஆனால் இதுவே என்னுடைய கருப்பொருள். உம் காயத்திலிருந்து பாய்ந்தொழுகிய, அந்நீரூற்றை நான் விசுவாசத்தால் கண்டதிலிருந்து, மீட்கும் அன்பு என் கருப்பொருளாயிற்றே. நான் மரிக்கும் வரையிலும் அவ்வாறேயிருக்கும். மடிந்துகொண்டிருந்த ஓர் கள்ளன் தன் நாளில் அந்த நீரூற்றைக் கண்டு மகிழ்ந்தான், அவன்போல் நீசனான நானும், என் பாவங்களை முற்றும் அங்கே கழுவுகிறேன். இந்தத் திக்கித்தடுமாறும் நாவு கல்லறையில் மவுனமாய்க் கிடக்கும் போதும் பேர்பெற்ற இனிமையான பாட்டினால், உம் இரட்சிக்கும் வல்லமையைப் பாடுவேன். 76. வல்லமையுள்ள தேவனை அன்பு அசைத்தது. தேவன் இவ்வளவாய் நேசிக்கத் தகாதவர்களிடத்தில், உலகத்தில் அன்புகூர்ந்தபடியால், நம்மை மீட்டெடுப்பதற்காக, அவரே இறங்கி வந்து, அவர் தாமே இவ்வுலகத்தில் மாம்சமாகி, மனுஷருக்குள்ளே வாசம்பண்ணினார், அவர்மேல் துப்பப்பட்டு, நிந்திக்கப்பட்டு, இகழ்ந்து பரியாசம் பண்ணப்பட்டார். இன்றிரவு நாம் செய்யவேண்டியது என்ன? சிலுவையின் அருகே நின்று "கர்த்தராகிய இயேசுவே, இதோ நான் நிற்கிறேன், நான் வருகிறேன். என் பாவங்களைக் கழுவி நீக்க வருகிறேன். என் துர்க்குணத்தையும், வேறுபாடுகளையும் என்னைவிட்டு நீக்கிவிடும். கர்த்தாவே நாளானது மறைந்து போவது போல, இந்தப் பழையவைகள் யாவும் ஒழிந்துபோகும்படி, சுத்தமான, ஊக்கமான அன்புடன் என்னை உம்மில் அன்புகூரச் செய்வீராக" என்று சொல்லுவோம். ஓ, சகோதரனே, சகோதரியே, நான் உங்களைப் புண்படுத்தியிருந்தால் அல்லது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னியுங்கள். ஆனால், நீங்கள் திரும்பிச் சென்று நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லவில்லை என்று மாத்திரம் ஒருபோதும் நினைத்துவிடாதீர்கள். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறது. நீ உன் செவியை அப்படியாகக் கடினப்படுத்தினால், அந்திக் கிறிஸ்துவினால் முத்திரையிடப்படுவதற்கு கடைசி முறையாகக் கடினப்படுத்துவாய். அந்திக்கிறிஸ்து உண்மையான கிறிஸ்துவிற்கு, உண்மையான ஆவியின் அசைவாடுதலுக்கு விரோதமாயிருக்கிறான். மனக்கிளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல் போன்ற காரியங்களால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக மிக நெருக்கமாக இருக்கிறது. 77. இன்றிரவு, அன்பின் இருதயத்துடன் கிறிஸ்துவினிடத்திற்குத் திரும்பி வாருங்கள். உங்கள் சத்துருக்கள் யாவரையும் நேசித்து அவர்களுடன் கைகுலுக்கும் நிலைக்குத் திரும்பி வாருங்கள். அதை நீ கடமைக்காகச் செய்யாமல், உன் இருதயத்தில் ஏதோவொன்று அப்படிச் சொல்லுவதால் அதைச் செய். இருப்பதிலேயே மிகவும் கசப்பான உன் சத்துருவையும் கூட ஏதோவொன்று நேசிக்கச்செய்யும். இன்றிரவு அது உன் இருதயத்தில் இல்லையென்றால், நீ எந்த உணர்ச்சியைப் பெற்றிருந்தாலும் சரி, இன்னமும் கிறிஸ்துவுக்குப் புறம்பாகவே இருக்கிறாய், இரக்கம்பெறாமல் தேவனுக்கு அந்நியனாய், இழக்கப் பட்டவனாக, தேவனுக்கு புறம்பாக இருக்கிறாய். அது சரிதான். நீங்கள் முன்னேவந்து, தெய்வீக அன்பின் அடிப்படையில் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? நாம் ஜெபிக்கலாமா. பரலோக பிதாவே, ஓ. நான் எவ்வளவாய்... ஓ, இந்த உலகத்தில் உள்ள ஜனங்களையும், இந்த மகத்தான லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தையும் பார்க்கும்போது, என் இருதயம் கசிகின்றது, பால் ரேடரை நினைக்கிறேன், அவர் தோளைச் சாய்த்து, ஒருவரின் தோளில் தன் தலையைச் சாய்த்து "நான் ஏன் என் செய்தியை தீவிரபக்திகொண்ட பெந்தெகொஸ்தே ஜனங்களுக்கு வழங்காதே போனேன்" என்று அழுதுகொண்டு சொன்னார். அவர் ஜனங்களைத் தட்டிக்கொடுக்க முயற்சித்த தவறைச் செய்து கடந்துபோய் விட்டார். தேவனே, நான் அந்தத் தவறைச் செய்ய விடாதேயும். 78. அன்புள்ள தேவனே, அந்தப் பள்ளத்தாக்கில் உறுதியாக நிற்க, கையில் பட்டயத்துடன் நிற்க எனக்கு உதவி செய்யும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைச் சுவிசேஷமாய் அறிவித்து, புருஷர்களிடமும் ஸ்திரீகளிடமும், தங்களுடைய பாவங்கள் உமக்கு முன்பாக இருக்கிறது என்பதையும், அவர்கள் அதை அறிக்கை செய்து, சுயத்திற்கு மரித்து, மறுபடியும் பிறவாத வரையில், அவர்கள் உமக்கு அந்நியராயிருக்கிறார்கள் என்பதையும் எடுத்துரைக்க, கர்த்தாவே அருள் செய்வீராக. தேவனே, இந்த அருமையான, பெரிய பெந்தெகொஸ்தேயினர், முழு சுவிசேஷச் சங்கத்தில் உள்ள புருஷரும் ஸ்திரீகளும், யாவரும் சத்தியத்தை அறியும் அறிவை அடைந்திருக்கிறார்களே. தேவனே, இப்பொழுது அவர்கள் சத்தியத்தில் நடப்பார்களாக. அவர்கள் வாழ்ந்து, பிரசங்கித்து, வேதவசனங்கள் செய்யும்படி உரைப்பதை அவர்கள் செய்வார்களாக. பிதாவே, இன்றிரவு இங்கேயிருப்பவர்களில் யாரேனும் உம்மை அறியாமல், வெறுமனே உணர்ச்சி வசப்படுதலை மாத்திரம் கொண்டிருந்து, ஆனால் ஒருபோதும் உண்மையாகவே மறுபடியும் பிறவாமல், உமக்குப் புறம்பாக இருப்பார்களானால், தாங்கள் மறுபடியும் பிறந்திருக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள், உம்மை ஏற்றுக்கொள்ள தைரியமுடையவர்களாய் முன்னே வந்து, "கர்த்தாவே, நான் என் சத்துருவுக்கு ஒரு அன்பான சிநேகிதனாக இருப்பதற்கும், கிறிஸ்து இந்த பூமியிலிருந்தபோது செய்த இந்தக் காரியங்களை நான் செய்யத்தக்கதாக, என் இருதயம் கனிந்து கரையும் வரை இங்கேயே தரித்திருப்பேன்" என்று கூறுவார்களாக. 79. தேவனே, கிறிஸ்துவின் ஆவி உள்ளே வரும் வரைக்கும் அவர்கள் தரித்திருப்பார்களாக, ஊழியக்காரரும் மற்ற யாவரும் குயவனின் திரிகை அண்டை சென்று, நொறுக்கப்பட்டு, மீண்டும் வனையும்படி ஒரு நொறுக்கப் படுதலின் நேரம் வரையிலும் தரித்திருக்கட்டும், ஒரு மகத்தான தேவ அன்பு பாய்ந்து, இத்தேசம் முழுவதுமாய் பரவி ஒரு பழைய பாணியிலான எழுப்புதலை உண்டாக்கி, பிள்ளைகளை தேவனிடத்திற்கு மீண்டும் திரும்ப அழைப்பதாக. கர்த்தாவே அதை அருளும். இரக்கமாயிருப்பீராக. நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தியிருக்கையில், இசைக் கருவியைச் சற்றே இசைக்க முடியுமா. தேவனை அறியாமல், அவருக்குப் புறம்பே, கிறிஸ்துவுக்குப் புறம்பே இருக்கிற பாவியான நண்பன் யாராகிலும் இங்கேயிருந்தால், உன் கரத்தை தேவனுக்கு நேராக உயர்த்தி, "தேவனே, என்மேல் இரக்கமாயிரும். நான் அதை விசுவாசிக்கிறேன்... நான் - நான் இப்பொழுது என் இருதயத்தில் விசுவாசிக்கிறேன், நான் நான் கர்த்தரிடம் வர விரும்புகிறேன். சகோதரன் பிரன்ஹாம், நீர் பேசிக் கொண்டிருந்தது போன்ற அந்த அனுபவம் எனக்கு வேண்டும். நான் தேவனை நோக்கி என் கரத்தை உயர்த்தி, என்னை அப்படியாக மாற்ற வேண்டுகிறேன்" என்று கூறுவாயா. 80. கிறிஸ்தவர்கள் ஜெபித்துக்கொண்டிருக்கையில், பாவிகள் உங்கள் கைகளை உயர்த்துவீர்களா. இது கடினமாக, வெட்டுகிறதாயிருக்கிறது என்பதை அறிவேன், ஆனால் சகோதரனே, அது சத்தியமாயிருக்கிறது. கவனியுங்கள், அதோ தூரே ரஷ்யாவில் இன்று உன்னுடைய இலக்கம் குறிக்கப்பட்ட அணுகுண்டுகள் தயாராக உள்ளன. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, அது... தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சரி, அது அருமையானது. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வாலிபனே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உம்மையும் ஆசீர்வதிப்பாராக. அது சரி. ஆம். "சகோதரன் பிரன்ஹாம், இதைப் பெற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும்?" "கர்த்தராகிய இயேசுவே, வேறெந்த வழியிலும் நான் வரவில்லை, நான் சரியாக இல்லை என்று என் இருதயத்தில் அறிவேன், நீர் ஒருவர் மாத்திரமே என்னைச் செவ்வையாக்க முடியும் என்பதையும் அறிவேன், இந்த ஒரே உறுதியின் அடிப்படையில் வருகிறேன். நீர் என் இருதயத்தையும், ஜனங்களுடனும், மற்ற காரியங்களுடனும் எனக்குள்ள மனப்பாங்கையும் மாற்றி, என்னை ஒரு புதுச்சிருஷ்டியாக்கும்படிக்கு, சரியாக இப்பொழுதே உம்மை விசுவாசித்து, முன்னே வந்து, ""என்னை ஏற்றுக்கொள்ளும்' என வேண்டி, என்னுடைய கரத்தை உமக்கு நேராய் உயர்த்துகிறேன்" என்று உங்கள் இருதயத்தில் சொல்லுங்கள். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக் கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், நித்தியஜீவனை உடைய வனாயிருப்பான்" என்று தேவன் தம்முடைய வார்த்தையில் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். 81. ஏழு அல்லது எட்டு பேர் கைகளை தங்கள் உயர்த்தியுள்ளனர். சபை ஜெபித்துக்கொண்டிருக்கையில், வேறு யாராவது இருப்பீர்களானால், இப்பொழுது சற்றே எழுந்து நில்லுங்கள். உங்கள் கரத்தை தேவனுக்கு நேராய் உயர்த்துங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஆம், இங்கேயிருக்கிற இளைஞனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது உள்ளனரா? இப்பொழுது, உங்கள் தலைகளைத் தாழ்த்தியவாறு ஜெபியுங்கள். "கர்த்தாவே, நான் என்ன செய்யவேண்டும்" என்று கேளுங்கள். ஓ. உன் பேர் அந்த அணுகுண்டில் தொங்கிக் கொண்டிருக்கலாம் என்பதை சற்றே எண்ணிப்பார். சங்கார தூதன் உன் வாசற்படியிலே நின்றுகொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள். "பாரும், நான் வேறு எப்போதாவது அதைச் செய்வேன்" என்று நீ கூறலாம். உனக்கு வேறொரு தருணம் இல்லாதிருக்கலாம். உனக்கு இன்னுமொரு வேளை கிடைக்க விரும்புகிறேன், ஆனால் அப்படி கிடைக்காதிருக்கலாம். "சகோதரன் பிரன்ஹாமே, உமக்கு என்ன ஆகிவிட்டது?" என்று நீங்கள் கேட்கலாம். ஓ, சிநேகிதரே நான் முடிவுகாலத்தைக் காண்கிறேன். முடிவு வந்துவிட்டதைக் காண்கிறேன். நான் தேசமுழுதும் சென்று, முயற்சி செய்திருக்கிறேன். நீங்கள் அவர் கிரியைசெய்வதைப் பார்க்கும்படியாகவும், நான் உங்களிடம் சத்தியத்தைச் சொல்லியிருப்பதை தேவன் உறுதிபடுத்தியதால், எவ்வளவு தவறாதவராயிருக்கிறார் என்பதைக் கண்டு கொள்ளும் படியாகவும், நான் உங்களிடத்தில் தயவுபெறும்படி தேவன் அருளியிருக்கிறா ரென்று நம்புகிறேன். இப்பொழுது, தேவனுக்கு முன்பாக என் கரத்தை வைத்துக் கூறுகிறேன், என் வாழ்க்கையில் எப்போதாவது, எதிலாவது உண்மையைச் சொல்லியிருப்பேனானால், அது சரியாக இப்போது உங்களிடம் கூறிய சத்தியமே. 82. சாத்தான் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள். முதலாவது உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் உள்ளே வராதபடிக்கு ராஜ்யத்துக்குப் புறம்பாக முத்திரையிடப் படுவீர்கள். "என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடு வதில்லை." எல்லாரையும் நேசிக்கின்ற ஆழமாக நிலைகொண்ட அன்பு, எல்லாப் புத்திக்கும் மேலான ஆழமாக நிலைகொண்ட சமாதானம் இன்றிரவு உங்களுடைய இருதயத்தில் இல்லையென்றால், உங்களுக்கு அந்த நிச்சயமான உறுதியில்லாதிருந்தால், உன் இருக்கையில் நான் உட்கார்ந்திருப்பேனாகில். நான் என் கரத்தை தேவனுக்கு நேராக உயர்த்தி, "தேவனே, இன்றிரவு அதை என் உள்ளத்தில் வையும். நான் - நான் ஒப்புக்கொடுக்க விரும்புகிறேன். நான் வரவிரும்புகிறேன். அதை நான் நிச்சயமாகவே விரும்புகிறேன். என்னை உமக்கு மறுபிரதிஷ்டை செய்ய விரும்புகிறேன். நான் - என்னை இருக்கவேண்டிய பிரகாரமாக நீர் மாற்றும்" என்று கூறுவேன். உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீர் ஒரு உண்மையான மனிதன். என் சகோதரனே, தேவன் உன்மேல் இரக்கமாயிருப்பாராக. இதுதான் - அங்கே தன் தலையைத் தாழ்த்தியிருக்கும் இளைஞனே. பையனே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இரத்தத்தால் நிறைந்த ஓர் ஊற்றுண்டு, வரமாட்டாயா? ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அதுதான் வழியாகும். நான் உம்மைப் பார்க்கிறேன் ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அதைச் செய்யவேண்டிய வழி அதுவே. தேவனுக்கு முன் நீங்கள் ஒளிந்துகொள்ள இயலாதென்று அறிவீர்கள். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது உள்ளனரா? 83. ஓ.அந்நாளிலே... இப்பொழுது, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள் பரிசுத்த ஆவியின் கிரியையைக் கண்டீர்கள். பாருங்கள் எதுவாயிருப்பினும் - நான் என்னைக் குறித்து மேன்மை பாராட்டும்படி இதைச் சொல்லவில்லை: அப்பிரகாரமாக நான் சொல்லவில்லை. ஆனால் முடிவு வருவதற்கு முன்பாக இத்தேசத்திற்கு ஒரு செய்தியைக் கொண்டுசெல்லவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற் காகவே நான் வருகிறேன். நான் கலிபோர்னியாவில் துவக்கி. கிழக்குக்கரை நோக்கிச் செல்லுகிறேன். கவனியுங்கள். சிநேகிதரே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், காலம் சமீபமாயிருக்கிறது. என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன், அதன் காரணமாகவே நான் கண்டிப்பாக இந்த விதமாகப் பிரசங்கிக்க வேண்டியிருக்கிறது. தேவன் என்னை உத்தரவாதியாக்குவார் ஆதலால் நான் கண்டிப்பாக அப்படிச்செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் என்னை ஒரு தேவ ஊழியக்காரனென்று விசுவாசிப்பீர்களானால், என்னை உண்மையாகவே தேவனிடத்திலிருந்து வந்ததாக விசுவாசிப் பீர்களானால், அவ்வாறாயின் இன்று இராத்திரி என்னை விசுவாசியுங்கள். நான் சத்தியத்தை உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் உங்களுடைய மதக்கோட்பாடுகளைப் புண்படுத்தியிருக்கலாம். எந்தச் சபைக்கும் எதிராக என்னிடத்தில் ஒன்றுமில்லை. அது எந்தச் சபையாக இருப்பினும், அது எந்தப் பெயரை உடையதாயிருந்தாலும் அதைக்குறித்து எனக்கு அக்கறையில்லை. ஆனால் அந்தச் சபையிலுள்ள தேவனுடைய அன்பை, உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய அன்பைப் பற்றியே நான் பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய சபை என்னவென்பது பொருட்டல்ல, நீங்கள் தேவனுக்கு முன்பாக என்னவாயிருக்கிறீர்கள் என்பதுதான் காரியம். அது ஒரு தனிப்பட்ட காரியமாயுள்ளது. நீங்கள் தொடங்குங்கள், பின்பு சபை உங்களைப் பின்பற்றும். 84. நாம் மீண்டும் ஜெபிப்பதற்கு முன், வேறு யாராவது தங்கள் கைகளை உயர்த்துவீர்களா? உங்கள் ஜீவியத்தை தேவனுக்கு மறுபிரதிஷ்டை செய்யுங்கள். அதுதான் சத்திய மென்று நீங்கள் விசுவாசித்தால், உங்கள் கைகளை உயர்த்தி, "அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுங்கள். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. கறுத்தநிறச் சகோதரனே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. வாலிபப்பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது அற்புதமாய் உள்ளது. வேறு யாராவது உள்ளனரா? தேவன் என்ன உரைத்தாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் "நீ அதைச் செய்தால், சரியாக அந்த நிமிஷமே நான் உனக்கு நித்திய ஜீவனை அளிப்பேன்" என்றார். பெண்மணியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் அந்தப் பெண்மணியை ஆசீர்வதிப்பாராக, சக்கர நாற்காலியில் இருக்கும் அந்தப் பெண்மணியை தேவன் ஆசீர்வதிப்பாராக. தன் கரத்தை உயர்த்தியவாறு இங்கேயிருக்கும் அந்த மனிதனை தேவன் ஆசீர்வதிப்பாராக, அங்கே பின்னால் பெண்மணியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஐயா, இரண்டுகைகளையும் உயர்த்திய உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஓ, என்னே. வேறு யாராவது இருக்கிறீர்களா? அதுதான் வழி, அதுதான் வழி. சிநேகிதனே, அதை நான் அறிவேன். என்னிடம் - என்னிடம் பகுத்தறிதல் உண்டு என்றால், என்னை நம்புங்கள். இங்கே இன்று இராத்திரியிலே தேவன் இருதயங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். அதைப் பிரசங்கிக்கும்படிக்கு அவர் இதை என் இருதயத்தில் வைத்தார். மேலும் இதுதான் சத்தியம் என்பதை நான் அறிவேன். அது உங்களுடைய நன்மைக்காகவே என்பதையும் அறிவேன். 85. ஓ, நகரமானது எல்லாவற்றாலும் நிறைந்துள்ளது. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் பேசும்போது, உங்கள் கரத்தை உயர்த்தி, "ஆம், கர்த்தாவே, நான் உம் சத்தத்தைக் கேட்கிறேன்" என்று சொல்லுங்கள். நல்லது, உலகத்திலேயே மகத்தான காரியம் அதுதான். தேவன் அறிவார் என்றால் - உன் காது குத்தப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் இனிமேல் உன்னுடன் பேசக்கூடாத ஒரு ஸ்தலத்தை நீ அடைந்துவிட்டால், என்னவாயிருக்கும். பிசாசும், புகழும், உலகத்தின் அர்த்தமற்ற மதிகேடான காரியங்களும் (சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.) உங்கள் காதைக் குத்திவிட்டன. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இன்னுமொரு - இன்னுமொரு சகோதரன், ஆம், தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஒருவேளை பிசாசு "ஓ, நான் என் சபையைச் சார்ந்தவன், மற்றவர்களைப் போலவே நானும் நல்லவன்" என்பதைக் கொண்டு உன் காதைக் குத்தியிருந்தால் என்னவாகும். அவன் உன்னை அந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டான் என்றால் என்னவாகும்? அப்பொழுது நீ மீதியிருக்கும் உன் வாழ்நாளெல்லாம் அந்த மதக்கோட்பாட்டைச் சேவிப்பாயே அன்றி உன்னால் ஆவியானவருக்குச் செவிகொடுக்க முடியாது. ஒரு சிறுபையன் தன் கரத்தை உயர்த்துவதைப் பார்க்கிறேன், சிறுவனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 86. நாம் இங்கே இருக்கும்போது, இவ்வேளையில் நான் வியக்கிறேன். தங்கள் கைகளை உயர்த்திய உங்களிடம் கேட்க விரும்புகிறேன். சற்றே ஒரு நிமிஷம் எழுந்து நிற்பீர்களா, உங்களையே கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்க, சற்றே வருவீர்களா? உம்மை, உம்மை, தேவன் உம்மைஆசீர்வதிப்பாராக. அது சரி. நாம் ஜெபிக்கும் வரை சற்றே ஒரு நிமிஷம் நில்லுங்கள். சற்றே எழுந்து நில்லுங்கள். அது சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்துவிடம் வருகின்ற ஜனங்களே, எழுந்து நின்று, "நான் விரும்புகிறேன், என்று கூறுங்கள். எதையும் பொருட்படுத்தவில்லை" என்று இப்பொழுது ஜனங்களின் முன்பாக நின்று, நீங்கள் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் என்று பாருங்கள். பெண்மணியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. எழுந்து நில்லுங்கள், வெறுமனே காலூன்றி நில்லுங்கள். உங்கள் கைகளை உயர்த்தியவர்கள், எழுந்து நின்று "கர்த்தராகிய இயேசுவே, நான் இதோ இருக்கிறேன். நான் வெளியரங்கமாக அறிக்கையிட மனதாயிருக்கிறேன். நான் உம்மைக்குறித்து வெட்கப்படுவேனாகில், என்னைக்குறித்து நீரும் வெட்கப்படுவீர். ஆனால் நான் மனுஷர் முன்பாக உம்மை அறிக்கைபண்ணினால், என்னை நீரும் பிதாவின் முன்பாகவும் பரிசுத்த தூதர்களின் முன்பாகவும் அறிக்கை பண்ணுவதாக' உரைத்தீர். ஆகையால் இதோ நான் யாவரும் காணும்படிக்கு வெளியரங்கமாக நிற்கிறேன். 'நான் இப்பொழுது என்னுடைய ஜீவியத்தை இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் என்மேல் கிருபையாயிருக்க வேண்டுகிறேன்' என்று சொல்லுவதற்காக நிற்கிறேன்" என்று கூறுங்கள். 87. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது அருமையாயுள்ளது. பெண்மணியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஒவ்வொருவரும், இன்னும் சில நிமிஷங்கள் கூட, நின்றுகொண்டிருங்கள். வேறு யாராவது உள்ளனரா, நீங்கள் எழுந்து நிற்பீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்களா? சிநேகிதனே, உலகத்திலுள்ள மற்ற எதைப் பார்க்கிலும், உனக்கு இது மேலானது. நீ எழுந்து நிற்பாயா? வேறு யாராவது இருக்கிறீர்களா? அவர்கள் நின்று கொண்டிருக்கையில், நான் வியக்கிறேன், நீங்கள் விசுவாசிப்பீர்களானால்... சகோதரியே, அது சரி, அவருடன் அதைச் செய்யவேண்டிய வழி அதுதான். தேவன் உன்மேல் இரக்கமாயிருப்பாராக. பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். நான் அதை அறிவேன். தேவன் உன்னோடு இருப்பாராக. இப்பொழுது, "இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே" என அழகான இசை வாசிக்கப்படும் போது, நாம் மிகவும் மெதுவாய் பாடுகையில், தேவன் என் ஜெபத்தைக் கேட்கிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், வியாதியஸ் தருக்காக ஜெபிப்பதற்கு, இதற்காக நான் அபிஷேகம் பண்ணப் பட்டிருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், தேவன் எனக்கு உங்கள் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தாரானால், உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பிற்காக இப்பொழுது நான் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறேன். நீங்கள் இங்கே வந்து. பீடத்தண்டை என்னுடன் நிற்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் உங்களுடன் கைகளைக் குலுக்கி, உங்கள்மேல் கைகளை வைத்து, உங்களுடன் ஜெபிக்க விரும்புகிறேன். இப்பொழுது, வர விரும்பும் யாவரும் சரியாக இங்கே வந்து, அவர்கள் எல்லாரும் தங்கள் ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு பிரதிஷ்டை செய்யும்போது, ஜனங்களே, மெதுவாய் பாடுவீர்களா. சரி. [ஒலிநாடாவில் காலியிடம்] 88. எங்கள் பரலோகப் பிதாவே, சில நிமிஷங்களுக்கு முன்புவரை உம்முடைய பிள்ளைகளாகிய இவர்கள், காணியாட்சிக்குப் புறம்பானவர்களாயிருந்தனர், ஆனால் இப்பொழுதோ, சமீபமாய் கொண்டுவரப்பட்டுள்ளனர். உம்மைத் தங்களுடைய இரட்சகராக அறிக்கை செய்யும்படி இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களில் அநேகர் ஒருவேளை பலவருஷங்களாகச் சபைகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உம்மைத் தங்களுடைய சொந்த இரட்சகராக விசுவாசித்து, ஏற்றுக்கொண்டு வந்திருக்கின்றனர். சகல வருத்தத்தின் மத்தியிலும், தங்கள் நண்பர்கள் அவர்களைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தாலும், இன்றிரவு அவர்கள் அதைக்குறித்து வெட்கப்படவில்லை. அவர்கள் இப்பொழுதும் விசுவாசிக்கிறார்கள். அவர்கள் உம்மைத் தங்களுடைய சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்கின்றனர், மேலும் அதை அவர்கள் இந்த ஜனங்களின் முன்பாகச் சாட்சிபகருகின்றனர். நீர் அவர்களுக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும், அவர்கள் உமக்கு ஸ்தோத்திர பலியைச் செலுத்தி, உமக்குத் துதியும் மகிமையும் செலுத்துகையில், தேவனே, நீர் அவர்களை அநுக்கிரகிக்குமாறு உம்மிடத்தில் வேண்டுகிறேன். மேலும் உம்முடைய இரக்கம் என்றைக்கும் அவர்கள்மேல் தங்கியிருக்கும்படி ஜெபிக்கிறேன். ஒருவேளை இப்பொழுதுதான், அவர்கள் இங்கே அழுது, ஒவ்வொருவரும் கண்ணீர் மல்க, கைக்குட்டைகளுள் விம்மி அழுகிறார்கள். கர்த்தாவே உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமக்கு நன்றி செலுத்துகிறேன், கர்த்தாவே. 89. ஏதோ ஒரு மகிமையான நாளில், அது எல்லாம் முடிந்துவிடும். ஏதோ ஒருநாள் மரணத்தின் குளிர்ந்த பேரலைகள் இங்கே உயர்த்தப் பட்டிருக்கின்ற ஒவ்வொரு கரத்தையும் வாரிக்கொள்ளும், அப்பொழுது தாங்கள் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் வந்திருக் கின்றனர் என்பதை அவர்கள் நினைவுகூருவார்கள். வானமும் பூமியும் ஒழிந்துபோம், அவர் வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்துபோவதில்லை. நீர் அவர்களுடைய இருதயத்தில் தட்டினதை அவர்கள் உணர்ந்த காரணத்தால், ஜனங்களின் முன்பு இங்கே நின்றனர். நீர் "என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; பிதாவானவர் இழுத்துக்கொள்ளுகிற யாவும் வரும், நான் அவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுத்து, கடைசிநாளில் அவர்களை ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், முன்னமே மரணத்தைவிட்டு எழுப்புவேன். அவர்கள் நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள்" என்றுரைத்தீர். அவர்கள் ஜெபத்தில் தரித்திருக்கும்போது, கர்த்தாவே ஒவ்வொருவர் மேலும் உம்முடைய கிருபையின் ஆசீர்வாதங்களை அருளும், ஏனெனில் நாங்கள் அதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம்.Content-Length: 0